வீரமே வாகை சூடும் – விமர்சனம்!

வீரமே வாகை சூடும் – விமர்சனம்!

விஷால் படத்துக்கு புதுசா ஏதாச்சும் யோசிக்கணுமா.. என்ன? -தங்கையை கொன்ற வில்லனை தேடி பழிவாங்கும் நாயகன் இது தான் வீரமே வாகை சூடும் படத்தின் கதைக்கரு. ஆனால் இப்படத்தில் விஷால் ரசிகர்களை பழி வாங்குவதுதான் ட்விட்ஸ்!

படத்தின் கதை என்னவென்றால் எஸ் ஐ ஆவதற்காக தயாராகிகொண்டிருக்கிறார் நாயகன் விஷால், அப்பா போலீஸ், அன்பான தங்கை என அழகான குடும்பம் இதில் ஒரு காதலியுடன் நியாயம் தர்மம் என பேசிக்கொண்டு திரிந்து கொண்டு திரிகிறார். இடையில் சில ரௌடிகளால் தங்கைக்கு தொல்லை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்களின் பிரச்சனை. கூடவே வாழும் பகுதியில் இயங்கும் பேக்டரியை மூட சொல்லும் போராளிக்கும் அரசியல் வாதி வில்லனுக்கும் பிரச்சனை இந்த மூன்று கதைகளுக்குள்ளும் நாயகன் ஊடுருவி சால்வ் செய்வதுதான். கதையை சொல்லும் போது நன்றாக தான் இருக்கிறது ஆனால் படம் தான் கொடூர அனுபவத்தை தருகிறது

இந்த விஷால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குடும்பத்திற்காக பழி வாங்குவார் என தெரியவில்லை. கொஞ்சம் யோசித்தால் பாண்டியநாடு படத்தில் அண்ணன் இதில் தங்கை அவ்வளவு தான் வித்தியாசம். இதில் புதிதாக திரைக்கதையிலும் ஒன்றும் இல்லை
அதே மாவு புளிச்ச தோசை அவ்வளவே . முதல் பாதியில் முதல் அரை மணி நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமெச்சூர்த்தனமான காட்சியமைப்பு, நடிப்பு, ஒன்னுமே இல்லாத திரைக்கதை என நம்மை சோதிக்கிறார்கள் படத்தின் இடைவேளையில் தான் உண்மையில் கதையே ஆரம்பிக்கிறது. படத்தை ஆரம்பித்திருக்க வேண்டிய இடம் அது தான்.. இடைவேளைக்கு வில்லனை தேடும் காட்சிகள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறது ஆனால் க்ளைமாக்ஸ் அதையும் உடைத்து போட்டுவிடுகிறது. படத்தின் நீளம் படத்திற்கு மிகப் பெரிய பலவீனம்

நாயகிகாகப்பட்டவர் சாவு விழுந்த வீட்டில் ஃபுல் மேக்கப்புடன், லிப்ஸ்டிக்குடன் சோத்து தட்டுடன் அலைவதெல்லாம் ஓவர். அவருக்கு மேக்கப் ஏனோ ஒட்டவே இல்லை. யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்க முயல்கிறார். ரவீனா ரவி தங்கை கதாப்பாத்திரம் ஓ கே.!.

விஷால் பாண்டியநாடு படத்தில் என்ன செய்தாரோ அதையே திரும்ப செய்துள்ளார். புதுசாக ஒன்றும் இல்லை.

கவின்ராஜ் ஒளிப்பதிவு பல காட்சிகளில் ஓவர் எக்ஸ்போசரில் எடுத்து சரிகட்டியது போல் உள்ளது. யுவனின் கைவண்ணத்தில் பின்னணி இசை அவரின் வழக்கமான பாணியில் இல்லாமல் ஏனோதானோவென கடந்து போகிறது.

இயக்குநர் விஷாலின் பழைய படங்களை பட்டி டிங்கரிங் செய்து அவருக்கே படமெடுத்துள்ளார்.

மொத்தத்தில் வீரமே வாகை சூடும் – பய புள்ளைங்க பொய் சொல்லிப்புட்டாய்ங்க

மார்க் 2.5 / 5 .

Related Posts

error: Content is protected !!