இந்தியனா இருப்போம் – ஆனா இந்திய பொருளை மட்டும் யூஸ் பண்ண நோ சான்ஸ்!

இந்தியனா இருப்போம் – ஆனா இந்திய பொருளை மட்டும் யூஸ் பண்ண நோ சான்ஸ்!
பெருமைக்காக ப்ராண்ட் பாத்து வாங்றவங்க பெரும் பணக்காரங்க. எண்ணிக்க கம்மி.
மத்த எல்லாரும் எதிர்பாக்றது ரெண்டே விசயம்.பொருள் தரமா இருக்கணும். பெஸ்ட் க்வாலிடினு இல்ல. குட் க்வாலிடி ஓகே. அடுத்தது விலை மலிவா இருக்கணும். வாங்றவனுக்கும் கட்டுப்படி ஆவணும்ல. ஒண்ணு இருந்தா ஒண்ணு இல்ல..ங்ற காரணம்தான் இந்திய பொருட்கள விட்டு நம்மாளுக விலகி போக காரணம்.
வெளிநாட்டு பொருள் வாங்றவனுக்கு தேச பற்று இல்லைனு சொல்றது அபத்தம். அப்ப வெளிநாட்டு பொருள இங்க விக்றதுக்கு அனுமதி தந்தவங்க தேச பக்தர் இல்லயா.
ஜெர்மன் கார்ல (BMW) போறார். அமெரிக்க வாச் (Movado) கட்டிருக்கார். ஜெர்மன் பேனால (Mont Blanc) கையெழுத்து போட்றார். அணிஞ்சிருக்றது ஜெர்மன் கண்ணாடி (Maybach).
இதுக்காக நம்ம பிரதமருக்கு தே.ப கம்மினு சொல்லிர முடியுமா. நம்பர் ஒன் நேசனலிஸ்ட், பேட்ரியாட் அவருதான்.
நம்ம யூஸ் பண்ற கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட், மொபைல் ஃபோன் எல்லாம் ஃபாரின் மேக். அதிகமா விக்கிற டூவீலர், கார் எல்லாம் வெளிநாட்டு பிராண்ட்.தாடி வெட்ற ட்ரிம்மர் தொடங்கி குஜராத்ல ஓட போற புல்லட் ரயில் வரைக்கும் வெளிநாடு தயாரிப்பு. இதுல எத கைவிட்றது.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டா, யூட்யூப், ஹாலிவுட்னு நம்ம வாழ்க்கை ஃபாரின் வலைல பின்னி கிடக்கு. எப்டி வெளில வர்றது. சீனாவ காலி பண்ணிட்டு போற ஃபாரின் கம்பெனிகள இங்க வரவழைக்க சட்டங்கள மாத்றோம். அவங்க நம்மூர்ல ஆலை திறந்து பொருள் தயாரிச்சா அது இண்டியன் ஆயிருமா.
பெங்களூர்ல அசெம்பிள் பண்ற ஐஃபோன், சென்னைல தயாரிக்ற சாம்சுங் டீவி லாம் இந்திய பொருள்னு எடுத்துக்க முடியுமா. இந்திய கம்பெனிகள் பல நாடுகள்ல ஃபேக்டரி வச்சிருக் காங்க. வெளிநாட்டு கம்பெனிகள விலைக்கு வாங்கி அதே ப்ராடக்ட்ச உற்பத்தி செய்றாங்க. இந்திய தயாரிப்புகள் உலகம் முழுக்க போகுது. அந்த நாடுகளும் இனிமேல் வெளிநாட்டு பொருளே வேணாம்பா..னுமுடிவு எடுத்தா நம்ம கதி என்ன.
5ஜி மொபைல் டெக்னாலஜில சீனா நம்மூர் வந்து ட்ரையல் பாக்க நம்ம அரசு அனுமதி தரல. ஜூம் ஆப் யாரும் வச்சுக்காதீங்கனு அதிகாரிகளுக்கு ஆடர் போட்டுது. ராணுவ தளவாடங்கள சில நாடுகள்ட்ட வாங்க கூடாதுனு ரூல்ஸ் போட்ருக்கு. இதெல்லாம் எல்லா நாடுகளும் எடுக்ற முன் ஜாக்ரதை முடிவுகள். தப்பு இல்ல.
இந்தியாங்ற சந்தை ரொம்ப பெருசு. இதுல நுழைய ஆசை இருக்ற வெளிநாட்டு கம்பெனிகள் இங்க வா. பணம் போட்டு தொழில் தொடங்கு. வித்துக்கோ. நீ வேற நாட்ல தயாரிக்ற பொருள டாலர்ல விலை குடுத்து நாங்க இறக்குமதி செய்றது இனிமே நடக்காது..னு சர்க்கார் சொன்னா நல்லா இருக்கும்.
இந்திய பொருளை மட்டுமே வாங்குங்கனு சொல்றது சாப்பிட்ற, குடிக்கிற அய்ட்டங்களுக்கு வேணா சரி வரலாம். ஆனா அதைக்கூட செயல்படுத்த முடியாது.
இதான் எதார்த்தம்.
கதிர்
error: Content is protected !!