இலங்கையில் நடக்கும் புத்த பூர்ணிமா விழாவில் மோடி கலந்துக்கிறார்!

இலங்கையில் நடக்கும் புத்த பூர்ணிமா விழாவில் மோடி கலந்துக்கிறார்!

“ஞானத்தெளிவு அடைந்தவர் என்று அர்த்தம் கொண்ட கெளதம புத்தர் அவதரித்ததும் அவர் ஞானம் பெற்றதும், தனது எண்பதாவது வயதில் “குசி’ என்னும் நகரில் மகாநிர்வாணம் (முக்தி) எய்திய நாளும் ஒரு “வைகாசி பௌர்ணமி’ என்கிறது ஸ்தல வரலாறு! இதைத்தான் ‘புத்த பூர்ணிமா’ என்று அழைக்கிறார்கள். புத்த பூர்ணிமா அன்று புத்தமதத்தினர், வெள்ளை நிற உடைகளை மட்டு மே அணிவ ர். அன்று மடாலயங்களிலும், வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் வழி பாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர். கீர் எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும். இந்தி யாவின் பீகாரில் உள்ள புத்த கயா விலும், உத்திரபிரதேச மாநிலத்தி லுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படு கிறது. அத்தகைய சிறப்புடைய புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் மே மாதம் இலங்கை செல்கிறார். விழாவில் பங்பேற்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே கூறியுள்ளார்.

modi feb 19

இவ்விழா பௌத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் முழுபெளர்ணமியையொட்டிய ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெளத்த நாடுகளில் ஒன்றான இலங்கையில், முதல்முறையாக இந்த விழாவை மே மாதம் 12-ம் தேதி கொண்டாடுகிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு பல்வேறு உலகநாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

புத்த பூர்ணிமா விழாவில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மியன்மர், திபெத், பூடான், மங்கோலியா மற்றும் பௌத்த மதத்தை பின்பற்றும் ஆயிரக் கணக்கானோர் பங்கற்க உள்ளனர். இந்த விழாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.