32°C
விளம்பரம்
Advertisement

நிதி நிலைமை மாறலை ; ஆனால் நிதியாண்டு ஜனவரி டூ டிசம்பர் என்று மாற்ற மோடி ஐடியா!

admin சேலம் Published: April 25, 2017 2 நிமிட வாசிப்பு Updated: May 1, 2017 எடிட்டர் ஏரியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



பெரும்பாலும் ஒரு நாட்டில் எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பது வழக்கம். ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும்.

modi apr 25

அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் நம் இந்தியாவில் 1867ம் ஆண்டில் இருந்து நிதியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 150 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றி, ஜனவரி முதல் டிசம்பர் வரை நிதியாண்டு என்ற நடைமுறையை கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் மாநில முதல்வர்களுடன் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இந்த யோசனையை அவர் முன்வைத்துள்ளார். முன்னரே குறிப்பிட்டது போல் ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டு என பிரிட்டனில் கடைப்பிடிக்கப்பட்டது. இதே நடைமுறை அதன் காலனி நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் ஜனவரி முதல் டிசம்பர் வரை வளர்ந்த நாடுகள் பல நிதியாண்டாக கடைப்பிடித்து வருகின்றன. உலக வங்கி சர்வதேச நிதியம் ஆகியவற்றிலும் இதே நடைமுறைதான் உள்ளது. சுமார் 156 நாடுகள் இவ்வாறு கடைப்பிடிக்கின்றன. எனவே வளர்ந்த நாடுகளுக்கு ஏற்ப இந்தியாவிலும் நிதியாண்டை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் பல இந்தியாவில் பல்வேறு தொழில்துறையில் முதலீடு செய்கின்றன. அங்கு ஜனவரி – டிசம்பர் நிதியாண்டாக உள்ளது.

இதையொட்டி இந்தியாவிலும் நிதியாண்டு இருந்தால் வசதியாக இருக்கும் என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். தற்போது ஏப்ரலில் தொடங்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படுவதால், ஜனவரியில் நிதியாண்டு தொடங்கினால் நவம்பரிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோல் விவசாய விளைச்சல் பற்றி மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கவும் இது வசதியாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேநேரத்தில், மாநில அரசுகளும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும். இது புதிய நடைமுறை சிக்கல்களை உருவாக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்