தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டுமே பரிந்துரை!

தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டுமே பரிந்துரை!
சர்வ தேச அளவில் 3-ல் 1 பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். ஆனால், அவர்களது நிலை எப்படி உள்ளது என்பதையும், பாதுகாப்புக்கு என்ன செய்ய உள்ளோம் என்பதையும் கவனித்தால் நம் நாட்டில் உள்ள குழந்தைகளில் 4 சதவீதம் குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். இது டெல்லியின் மக்கள் தொகையைவிட அதிகம். அதிலும் பலர் ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இறந்து விடுகின்றனர். இதைத் தடுக்க, தத்தெடுத்தல் மூலம் அவர்களை குடும்பச் சூழலில் வளர்க்க வேண்டியது அவசியம்.
pexels-photo
சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் 1,000 குழந்தைகளில் 95 குழந்தைகள் கருவிலேயே இறந்துவிடுவதாகவும், 70 குழந் தைகள் ஒரு வருடத்துக்குள் இறப்பதாகவும், 50 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள் எனவும் தெரிய வருகிறது. 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளில் 50 சதவீதத்தினர் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் ஏதாவது ஒரு வகையில் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. தத்தெடுப்போரின் எண் ணிக்கையை அதிகப்படுத்தி இந்த நிலையை மாற்ற அரசும், தன்னார்வ அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.
பிறப்பு விகிதத்துக்கு ஏற்ப தத்தெடுப்பை ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் விகிதம் 1,200 1,500 வரை இருந்தது. அந்த நிலை தொடர்ந்திருந்தால், இப்போது ஆண்டுக்கு 5,000 குழந்தைகள் வரை தத்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் நிலைமை அப்படியில்லை. மிகவும் குறைந்த அளவிலான குழந்தைகளே தத்தெடுக்கப்படுகிறார்கள். இதை மத்திய அரசே வேதனையுடன் தெரிவித்திருந்த நிலையில் விரும்பிய குழந்தையை தத்தெடுக்க முடியாது என்ற புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதாவது இந்தியாவில் தேசிய தத்தெடுப்பு ஆணையத்தின் மூலம் (கேரா) ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கலாம். அதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 3 குழந்தை களை பரிந்துரை செய்வார்கள். அவர்களில் ஒரு குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிமேல் ஒரு குழந்தையை மட்டுமே தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது. இந்த விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து கேரா தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் தீபக் குமார் நேற்று  செய்தியாளர்களிடம், “ஆதரவற்ற பல குழந்தைகள் தத்தெடுக்கப்படாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும் நிலை உள்ளது. அதேசமயம் தத்தெடுக் கும் எண்ணிக்கையும் மிக குறைவாக உள்ளது. எனவே, 3 குழந்தைகளைப் பரிந்துரைத்து அவர்களில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டுமே பரிந்துரை க்கப்படும்.
தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு எங்கள் பாதுகாப்பில் உள்ள எல்லா குழந்தைகளையும் பரிந்துரைப்போம். அதன்படி ஒவ்வொரு பெற்றோருக்கும் 3 முறை வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் வேறு வேறு குழந்தையின் புகைப்படம் மற்றும் விவரங்கள் அனுப்பப்படும். அதற்குள் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் அல்லது மறுக்கலாம்.
குழந்தை பற்றி விவரம் அனுப்பிய பிறகு 48 மணி நேரத் துக்குள் தத்தெடுப்பது குறித்த முடிவை பெற்றோர் தெரிவிக்க வேண்டும். அதன்பின் மற்ற நடை முறைகளை முடிக்க 20 நாட்கள் ஆகும். அதன்பிறகு நீதிமன்றத்தில் தத்தெடுப்பு உத்தரவு பெற முடியும்” என்றார்.
அது சரி தத்தெடுப்பது எப்படி?
தத்தெடுக்க முன்பு நிறைய அமைப்புகள் இருந்தன. ஆனால் அதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க, தத்தெடுத்தல் முழுவதும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘காரா’ (மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு ஒழுங்குமுறை ஆணையம் ) கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.  http://cara.nic.in/ என்ற இணையதளத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். அதன்பேரில் இணையதளத்திலேயே விண்ணப்பிக்க முடியும். மாவட்ட சமூக நலத் துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் மூலமாகவும், மாநிலம்தோறும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு தத்தெடுப்பு அமைப்புகள் (தமிழகத்தில் 14 அமைப்புகள் உள்ளன) மூலமும் குழந்தைகளைத் தத்தெடுக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அனைத்துமே ‘காரா’ அமைப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும். காராவைத் தொடர்புகொள்ள 1800-11-1311 என்ற இலவச தொலைபேசி எண்ணும் உள்ளது’
error: Content is protected !!