இலங்கையில் மீண்டும் இராணுவக் கண்காணிப்பு – அதிபர் உத்தரவால் சர்ச்சை !

இலங்கையில் மீண்டும் இராணுவக் கண்காணிப்பு – அதிபர் உத்தரவால் சர்ச்சை !

லங்கை முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதற்காக என்று தெரிவித்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை அதிபர் மீண்டும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவைப் பயன்படுத்தி ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது பேசு பொருளாகி உள்ளது.

இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, மீண்டும் இலங்கை இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்க வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

“இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதற்காக என்று தெரிவித்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை அதிபர் மீண்டும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவைப் பயன்படுத்தி, ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மனித உரிமைகள் வழக்கறிஞர் அம்பிகா சத்குணநாதன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த அதிபர்களும் நடைமுறைக்கு மாறான அவசர நிலையை தொடர்ந்து பிரகடனப்படுத்தி வந்ததையும் அம்பிகா சத்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருள் ஆகி உள்ளது.

error: Content is protected !!