சீனாவில் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 115 ஐ தாண்டியது!

சீனாவில் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 115 ஐ தாண்டியது!

சீனாவில். கன்சூ மற்றும் கிங்காய் மாகாணங்களில் ஏற்பட்ட ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தன. 115 பேர் உயிரிழந்துள்ளனர் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு மாகாண எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.சீனாவில் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் கிழக்கு பகுதிகளில் ரிக்டர் அளவில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 23 பேர் காயம் அடைந்தனர். 1900களில் 200 கி.மீ. ஆழத்துக்குள் 6 ரிக்டர் அளவுக்கு மேல் சீனாவில் ஏற்பட்ட 3 மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று (டிசம்பர் 19) தாக்கியது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கன்சு மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 கிமீ மேற்கு-தென்மேற்கில் 35 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 11.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.தவிடுபொடியான கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 230க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.நிலநடுக்கத்தால் தாக்குண்டதில் வீடுகள் சிதிலமானது; மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக குடிமக்கள் இரவில் மேலும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வீடுகளை துறந்து வீதிகளில் மக்கள் அடைக்கலமானார்கள்.

தகவல்தொடர்பு முடங்கியதால் அதிகாலையில் இருந்தே மீட்பு பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. கட்டிடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று வெளியான தகவலால் மக்கள் மத்தியில் கவலை கூடியுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!