ஐ.மாபா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி ஐ.மாயாண்டி பாரதி!

ஐ.மாபா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி ஐ.மாயாண்டி பாரதி!

துரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஐ.மாபா, தனது வாழ்நாளை 13 ஆண்டுகள் வரை சிறையில் கழித்தவர். ’ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்’ என்ற வார்த்தை ஐ.மாபாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை. “ நாங்கள் பள்ளிக்கூடம் போகும்பொழுது தெருவில் வந்தே மாதரம்,பாரத மாதாவுக்கு ஜே! என்று சத்தமாக சொல்லிக்கொண்டு மதுரை வீதிகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக செல்வார்கள். அதை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு பைகளை தூக்கி எறிந்துவிட்டு அவர்களுடனே சென்று விடுவேன். தடையை மீறி ஊர்வலம் சென்று முதல் முறை கைதானபோது, போலீஸ் பள்ளிக்கூடபையன் என்று திருப்பி அனுப்பி விட்டது. ஆனால் தொடர்ந்து எல்லா கூட்டங்களிலும் கலந்துகொண்டதால் கைது செய்தார்கள்” அதுதான் என்னுடைய முதல் கைது என்று தன்னை சந்திக்க வருபவர்களிடம் நினைவு கூர்ந்து இருக்கிறார் மாயாண்டி பாரதி.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்குகாக தெருவில் இறங்கி போராடி சிறை சென்றவர் ஐ.மாபா. முன்னாள் குடியரசு தலைவர்களான சஞ்சீவ ரெட்டி, வெங்கட்ராமன் முதல் ஜீவா, காமராஜர் வரை பல்வேறு முக்கிய நபர்களுடன் சிறையில் இருந்து இருக்கிறார்.

அவரது எழுத்துக்கள் மிகவும் பிரபலமானவை. போருக்கு தயார், தூக்கு மேடைப்பாலு, படுகளத்தில் பாரத தேவி, வெள்ளையனே வெளியேறு, பாரதத்தாயின் விஸ்வரூபம், வெடி குண்டுகளும் வீரத்தியாகிகளும், அரசு என்றால் என்ன? போன்ற நுால்களையும் அவர் எழுதி இருக்கிறார்.

ஐ.மாபாவின் துணிச்சலான செயல் என்று நீதிமன்றமே பேசிய சம்பவம் உண்டு. நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி “உனக்கு சொத்துக்கள் இருக்கா? உன்னை ஜாமீனில் விடுகிறேன்” என்றதும் ஐ.மாபா “சொத்துக்கள் நிறைய இருக்கு, ரயில்வே ஸ்டேஷன், மீனாட்சியம்மன் கோவில், மங்கம்மா சத்திரம் எல்லாமே எங்களுடையதுதான்”. என்று ஆவேசமாக கூற, ஒரு மாத காலம் கூடுதலாக சிறைத்தண்டனை பெற்றார்.

குழந்தைகள் இல்லாத ஐ.மாபா மனைவி பொன்னம்மாள் இறந்த பிறகு, தனிமையில் கழிக்காமல் தெருவில் இருக்கும் குழந்தைகளை எல்லாம் வாரி அணைத்துக் கொள்வார். குழந்தைகளின் மத்தியில் அவருக்கு மிட்டாய் தாத்தா என்ற செல்லப் பெயர் உண்டு. பாரத சக்தி, லோக் சக்தி, நவசக்தி, தீக்கதிர் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி பல்வேறு செறிவான கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இவரது கட்டுரைகள் சுதந்திர போரட்டத்தை கிளர்ச்சியடைய செய்கிறது என ஆங்கிலேய அரசு இவரை கைது செய்ய பத்திரிகை அலுவலகம் தேடிச் சென்றபொழுது பல்வேறு முறை, அவரிடமே மாயாண்டி பாரதி எங்கே? என்பார்களாம். “ அவர் வெளியே சென்றிருக்கிறார். இன்று போய் நாளை வாங்க,” என்று சாதுர்யமாக பதில் சொல்லி பலமுறை காவலர்களை ஏமாற்றி இருப்பதாக அடிக்கடி சொல்லுவார் ஐ மாபா.🙏🏻

😍எக்ஸ்ட்ரா தகவல்🎯

இளையராஜா அண்ணனை முதன்முதலில் இசைக்குழு ஆரம்பிக்க வச்சவர் இந்த ஐ.மாயாண்டி பாரதிதானாம்

இன்று மாயாண்டி பாரதி நினைவு நாள்

error: Content is protected !!