உலகின் அசிங்கமான நாய்’ பட்டம் வென்ற ‘மார்த்தா’!
சர்வதேச அளவில் அழகிகள் போட்டி நடத்தும் அதே அமெரிக்காவில் ‘உலகின் அசிங்கமான நாய்’ என்ற போட்டி, கடந்த 29 ஆண்டுகளாக, அங்குள்ள கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் நடை பெற்று வருகிறது. நாய்களைத் தத்தெடுப்பதற்கான விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இதில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து முதல் பரிசு பெற்றது. சிவப்பு கண்க ளுடன், தோல்கள் மிகுந்த மடிப்புகளுடன், கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த இந்த நாய், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. 3 வயதாகும் மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது.

சிவப்பு நிற கண்கள், அதிக சதை, கறுப்பு நிறம் எனப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது மார்த்தாதான். மார்த்தா பற்றி அதன் உரிமையாளர் ஜின்ட்லர் கூறுகையில், “இதை நாய்கள் பாதுகாப்பு மையத்திலிருந்து தத்தெடுத்தோம், அப்போது, மார்த்தாவுக்கு பார்க்கும் திறனில்லை. பல அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகே அதனால் பார்க்க முடிகிறது” என்றார்.
இதுகுறித்து நடுவர்கள் கூறுகையில், இந்த போட்டியானது நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக நடத்தப்படுகிறது. மார்த்தா அனைத்திலும் வித்தியாசமாக இருந்ததால் கிரீடத்தை வென்றுள்ளதாக தெரிவித்தனர்.


