தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா-வுக்கு டாட்டா!

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா-வுக்கு டாட்டா!

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 31-ம் தேதியுடன்) நிறைவடைகிறது. தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரின் பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.

governor aug 31

இந்நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் விதயாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், ஹைதராபாத்தில் பிஎஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.

சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய வித்யாசாகர் ராவ், 1972-ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.

மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985-ல் தேர்வு செய்யப்பட்டார்.

1998-ல் கரீம் நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், 1998-ல் ஆந்திரப் பிரேதச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 1999-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று தேசிய அரசியலில் அறிமுகமானார்.

பின்னர், அதே ஆண்டில் இலாகா மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.

2014 ஆகஸ்ட் மாதம், வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநில அளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

Related Posts