சாவி, ஐபோன், பிரியாணி! 2.3 கோடி பேரை கட்டிப்போட்ட ஸ்விக்கி ஆண்டறிக்கை 2025!

சாவி, ஐபோன், பிரியாணி! 2.3 கோடி பேரை கட்டிப்போட்ட ஸ்விக்கி ஆண்டறிக்கை 2025!

ஸ்மார்ட் செல்போன் வைத்திருப்போரில் 95% பேர் உபயோகிக்கும் ஸ்விக்கி (Swiggy) ஆப், தனது பத்தாவது ஆண்டறிக்கையான How India Swiggy’d 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த 2025-ம் நிதியாண்டில், ஸ்விக்கி நிறுவனம் சுமார் 15,600 கோடி ரூபாய் வருவாயைப் (Revenue) பெற்று அசத்தியுள்ளது. இந்தியா முழுவதும் 700-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படும் ஸ்விக்கியை, மாதந்தோறும் சுமார் 2.3 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி 30 முதல் 40 லட்சம் ஆர்டர்கள் வரை கையாளும் ஸ்விக்கிக்கு, தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில் சென்னையில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை டெலிவரி செய்து ‘பூங்கொடி’ என்ற பெண் ஊழியர் சாதனை படைத்துள்ளார். அக்‌ஷய் குமார் என்ற ஹைதராபாத் வாடிக்கையாளர் 22 ஐபோன்-17 போன்களை ஒரே ஆர்டரில் வாங்கியது மற்றும் சென்னையில் ஒருவர் செல்லப்பிராணிகளுக்காக மட்டுமே 2.41 லட்சம் ரூபாய் செலவிட்டது எனத் தமிழ்நாட்டின் டேர்ன் ஓவர் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு மலைக்க வைக்கிறது. இந்த ஸ்விக்கி தனது 10-வது ஆண்டறிக்கையில், உணவு டெலிவரி மட்டுமின்றி Instamart, Genie மற்றும் Dineout போன்ற பிற சேவைகள் குறித்தும் வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:

1. பிரியாணி தான் ‘கிங்’ – 10-வது ஆண்டாக முதலிடம்!

இந்தியர்களின் ஃபேவரிட் உணவாகத் தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • மொத்த ஆர்டர்கள்: 9.3 கோடி (93 Million).

  • வேகம்: ஒவ்வொரு நிமிடத்திற்கும் 194 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன (அதாவது ஒரு செகண்டிற்கு 3.25 பிரியாணிகள்).

  • வெரைட்டி: இதில் சிக்கன் பிரியாணி தான் 5.7 கோடி ஆர்டர்களுடன் முதலிடம்.

டாப் 5 உணவுகள்:

  1. பிரியாணி

  2. பர்கர் (4.4 கோடி)

  3. பீட்சா (4 கோடி)

  4. தோசை (2.6 கோடி)

  5. இட்லி (1.1 கோடி – காலை உணவில் முதலிடம்)

2. ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்பு வகைகள்

  • மாலை நேர ராஜா: மாலை 3 மணி முதல் 7 மணி வரை இந்தியர்கள் அதிகமாக பர்கர் மற்றும் சிக்கன் ரோல் ஆர்டர் செய்துள்ளனர்.

  • டீ & சமோசா: 34 லட்சம் சமோசாக்களும், 29 லட்சம் இஞ்சி டீயும் (Adrak Chai) ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

  • டெசர்ட்: ஸ்வீட்ஸ் வரிசையில் ஒயிட் சாக்லேட் கேக் (69 லட்சம்) முதலிடம் பிடித்துள்ளது. குலாப் ஜாமூன் மற்றும் காஜு கத்லி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

3. இன்ஸ்டாமார்ட் (Instamart) – மளிகைப் பொருட்களில் அதிரடி!

  • பால்: ஒரு செகண்டிற்கு 4 பாக்கெட் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

  • கறிவேப்பிலை சாதனை: கொச்சியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஒரு வருடத்தில் 368 முறை கறிவேப்பிலை மட்டும் ஆர்டர் செய்துள்ளார் (கிட்டத்தட்ட தினமும் ஒருமுறை!).

  • ஆரோக்கியம்: புரோட்டீன் பார்கள் மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் ஆர்டர் செய்வது 2025-ல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

4. மலைக்க வைக்கும் தனிநபர் ஆர்டர்கள் (Extremes of 2025)

  • பெரிய ஆர்டர்: மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் ஓராண்டில் 3,196 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார் (தினமும் சராசரியாக 9 முறை).

  • அதிக செலவு: பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் நூடுல்ஸ் வாங்க மட்டுமே ₹4.36 லட்சம் செலவு செய்துள்ளார்.

  • ரெட் புல் மோகம்: மும்பையில் ஒருவர் ரெட் புல் பானத்திற்காக ₹16.3 லட்சம் செலவிட்டுள்ளார்.

  • டிப்ஸ் (Tip): பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் டெலிவரி பார்ட்னர்களுக்கு மொத்தமாக ₹68,600 டிப்ஸ் கொடுத்து நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

  • ஐபோன் டெலிவரி: ஹைதராபாத்தில் ஒருவர் இன்ஸ்டாமார்ட் மூலம் 22 ஐபோன்-17 போன்களை ஒரே ஆர்டரில் வாங்கியுள்ளார். மொத்த மதிப்பு ₹22 லட்சம்!

  •  சென்னையின் ‘காண்டம்’ சாதனை: 2025-ம் ஆண்டின் ஸ்விக்கி அறிக்கையில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் சென்னையைப் பற்றியதுதான். சென்னையில் உள்ள ஒரு வாடிக்கையாளர், ஓராண்டில் மட்டும் ₹1.06 லட்சத்திற்கும் அதிகமான தொகையை காண்டம் (Condoms) வாங்கச் செலவிட்டுள்ளார். இதற்காக அவர் 228 முறை ஆர்டர் செய்துள்ளார். குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இதன் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது.

    செல்லப்பிராணிகளுக்குத் தனிப் பாசம்: சென்னையைச் சேர்ந்த மற்றொரு வாடிக்கையாளர் தனது செல்லப்பிராணிகளுக்காக (Pet Supplies) மட்டும் ஒரு வருடத்தில் ₹2.41 லட்சம் செலவு செய்து ‘சிறந்த செல்லப்பிராணிப் பெற்றோர்’ (Pet Parent of the Year) என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

       இதர சுவாரஸ்யங்கள்:

    • புரோட்டீன் மோகம்: நொய்டாவைச் சேர்ந்த ஜிம் பிரியர் ஒருவர், புரோட்டீன் பவுடர் உள்ளிட்ட உடற்பயிற்சி சார்ந்த பொருட்களுக்காக (Protein Supplements) ₹2.8 லட்சம் செலவிட்டுள்ளார்.

    • பால் விற்பனை: இந்தியா முழுவதும் ஒரு செகண்டிற்கு 4 பாக்கெட் பால் வீதம் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்படுகிறது.

    • தங்கம் மற்றும் மிகச்சிறிய ஆர்டர்: மும்பையைச் சேர்ந்த ஒருவர் ₹15.16 லட்சம் மதிப்பிலான தங்கத்தை ஸ்விக்கியில் வாங்கியுள்ளார். அதே நேரத்தில், பெங்களூருவில் ஒரு வாடிக்கையாளர் வெறும் ₹10-க்கு ‘பிரிண்ட் அவுட்’ எடுக்க ஆர்டர் செய்ததுதான் இந்த ஆண்டின் மிகச்சிறிய ஆர்டராகப் பதிவாகியுள்ளது.

5. நகரங்களின் பங்களிப்பு

  • டெலிவரி ஹீரோக்கள்: பெங்களூருவைச் சேர்ந்த முகமது ரஸிக் 11,718 ஆர்டர்களை டெலிவரி செய்து முதலிடம் பிடித்துள்ளார்.

  • பெண் சாதனையாளர்: சென்னையில் பூங்கொடி என்ற டெலிவரி பார்ட்னர் 8,169 ஆர்டர்களை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளார்.

  • 6. ஸ்விக்கி ஜீனி (Swiggy Genie) – எதை அனுப்பினார்கள்?

    வீட்டுச் சாவி முதல் லேப்டாப் வரை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் ‘ஜீனி’ சேவையில் இந்த ஆண்டு நடந்தவை:

    • மறதி மன்னர்கள்: மக்கள் அதிகமாக அனுப்பிய பொருள் ‘வீட்டுச் சாவி’ (House Keys). லேப்டாப் சார்ஜர்கள் மற்றும் டிபன் பாக்ஸ்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • விலையுயர்ந்த டெலிவரி: மும்பையில் ஒருவர் தனது வைர மோதிரத்தை (Diamond Ring) ஜீனி மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

    • ஆச்சரியம்: டெல்லியில் ஒருவர் தனது செல்லப் பிராணியான பூனைக்கு பிடித்த பொம்மைகளையும் போர்வையையும் ‘ஜீனி’ மூலம் அதன் தங்கும் இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

    7. ஸ்விக்கி டைன்-அவுட் (Swiggy Dineout) – ஹோட்டல் விசிட்

    மக்கள் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடும் பழக்கம் 2025-ல் பல மடங்கு அதிகரித்துள்ளது:

    • அதிக பில்: ஒரு குழுவினர் ஒரே அமர்வில் ₹5.8 லட்சம் ஹோட்டல் பில் செலுத்தியுள்ளனர்.

    • பிஸியான நேரம்: சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் இந்தியர்கள் அதிகமாக ‘டைன்-அவுட்’ புக்கிங் செய்துள்ளனர்.

    • விருப்பமான உணவகம்: ரூஃப்டாப் (Rooftop) மற்றும் லைவ் மியூசிக் உள்ள உணவகங்களுக்கே மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.

    8. இன்ஸ்டாமார்ட் (Instamart) – மளிகை மற்றும் எலக்ட்ரானிக்ஸ்

    • ஐபோன் மேனியா: ஐபோன்-17 அறிமுகமான நாளில், நிமிடத்திற்கு 12 ஐபோன்கள் இன்ஸ்டாமார்ட் மூலம் டெலிவரி செய்யப்பட்டன.

    • அவசரத் தேவை: நள்ளிரவு 11 மணிக்கு மேல் பேட்டரிகள் (Batteries) மற்றும் மொபைல் சார்ஜர்கள் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

    • பூக்கள்: காதலர் தினத்தின் போது நிமிடத்திற்கு 250 ரோஜாப் பூக்கள் விற்பனையாகின.

    • கோல்டு காயின்: தீபாவளி பண்டிகையின் போது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை மக்கள் 10 நிமிட டெலிவரியில் வாங்கியுள்ளனர்.

    9. ஸ்விக்கி ஒன் (Swiggy One) – மெம்பர்ஷிப் லாபம்

    • ஸ்விக்கி ஒன் உறுப்பினர்கள் இந்த ஆண்டு டெலிவரி கட்டணத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக ₹1,200 கோடிக்கும் மேல் மிச்சப்படுத்தியுள்ளனர்.

    • ஒரு தனிநபர் மெம்பர்ஷிப் மூலம் அதிகபட்சமாக ₹2.5 லட்சம் வரை சேமித்துள்ளார்.

    10. சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்பு

    • பிளாஸ்டிக் தவிர்ப்பு: சுமார் 4.2 கோடி ஆர்டர்களில் வாடிக்கையாளர்கள் ‘கட்லரி’ (Spoons/Forks) வேண்டாம் என்று தேர்வு செய்து பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்துள்ளனர்.

    • டெலிவரி பார்ட்னர்கள்: இந்த ஆண்டு டெலிவரி ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் குழந்தைகளின் கல்விக்காக ₹50 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 மொத்தத்தில் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் இந்த ஆண்டறிக்கைகள் வெறும் தரவுகள் மட்டுமல்ல, மாறிவரும் இந்தியர்களின் வாழ்க்கை முறையையும், தொழில்நுட்பம் நம் அன்றாடத் தேவைகளை எவ்வளவு எளிதாக்கியுள்ளது என்பதையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

Related Posts

error: Content is protected !!