கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் “வா தமிழா வா”!
சில பல பொது ஜனங்களை அழைத்து நடத்தும் விவாத நிகழ்ச்சியான ‘தமிழா தமிழா’ 2018-ஆம் ஆண்டு ஒளிபரப்பானதில் இருந்து, பல சமூகத் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி விவாதித்தது. கரு. பழனியப்பன் அந்நிகழ்ச்சியை முதல் அத்தியாயத்திலிருந்தே தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை அவர் கையாளும் விதத்திற்காக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார். இப்போது அவர் வா தமிழா வா என்ற புதிய விவாத நிகழ்ச்சி மூலம் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார். இந்நிகழ்ச்சி கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொது மக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளை விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது.
தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்கும் ஓர் மேடை அமைத்து தருகிறது எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.