கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள் & ஆசிரியர்கள் அனுமதி மறுப்பு!- வீடியோ!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள் & ஆசிரியர்கள் அனுமதி மறுப்பு!- வீடியோ!

ர்நாடகாவில் சில பள்ளிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, பதற்றத்தை தணிப்பதற்காக கர்நாடகாவில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பதற்றம் ஓரளவு தணிந்ததை அடுத்து அங்கு 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றனர்.

இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஆசிரியர்கள் சிலரையும் ஹிஜாப்-பை களைந்து விட்டு போகும்படி சொன்னார்கள். இதனால் அந்த மாணவிகளின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஹிஜாப்பை கழற்றிய சில மாணவிகள் மட்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அசம்பாவிதங்களை தடுக்க பல பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் 19-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் நாளை திறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடகா ஐகோர்ட்டில்உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!