ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்!

ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்!

கோலிவுட்டோ ஹாலிவுட்டோ.. அங்கே பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் தங்களுடைய வாரிசுகளை களமிறக்குவது என்பது சகஜமான விசயம். அப்படி வாரிசுகளாக அறிமுகமாகும் இளம் நடிகர், நடிகைகள் தங்களுடைய திறமையால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என்பது மட்டுமே உண்மை. அந்த வகையில் ரசிகர்களைக் கவர்ந்த கீர்த்தி சுரேஷ், காளிதாஸ் ஜெயராம், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும் சூழலில் தானும் அந்த லிஸ்டில் இடம் பெற விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார் ஒரு வாரிசு நடிகை.

அவர் யார் என்று கேட்கிறீர்களா? கன்னட திரையுலகின் மிகவும் பிரபல நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ராஜ்குமாரின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்த ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர், ஹீரோ யார் உள்ளிட்ட, விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!