கமல் ஹாசன்:-என்னும் நட்சத்திர அரசியல்வாதியின் கழுத்தை அமுக்கும் திமுக
கமல்ஹாசன் என்பவர் தமிழ் சினிமாவின் ஒரு பிரபலமான பெயர் மட்டுமல்ல, ஒரு பல்துறை ஆளுமை கொண்டவர். அவர் ஒரு நல்ல நடிகர், படிப்பாளி, பல மொழிகள் அறிந்தவர், இங்கிதம் தெரிந்தவர் மற்றும் யதார்த்தத்தை நன்கு புரிந்தவர்.ஆனால், அவரது அரசியல் பயணத்தில் திமுகவுடனான உறவு ஒரு புரியாத புதிராகவே தொடர்கிறது. ஆனால், முழுத் தகுதிவாய்ந்த நபருக்கு திமுக தலைமை பாண்ட் பேப்பரில் எழுதி கொடுத்தப்படி பாராளுமன்ற உறுப்பினர் (ராஜ்ய சபா எம்.பி) பதவியை வழங்க மறுத்து தன் ஆலோசகர் இந்து ராம்-மிற்கு கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவின் தவறான அரசியல் சூழ்ச்சிகளையும், உள்நோக்கங்களையும் எதிரொலிக்கிறது.

கடந்த தேர்தலில் திமுகவின் உறுதிமொழி மற்றும் மோசடி
2018-ல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியபோது, கமல் ஹாசன் தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. “டார்ச் லைட்” சின்னத்துடன் மக்களுக்கு ஒளியைக் காட்ட வந்தவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், வெற்றி அவரைத் தேடி வரவில்லை. இதனால், அரசியல் கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கமல், திமுகவுடன் நெருக்கமானார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்த, கமலுக்கு “உப்புக்கு சப்பாணி”யாக ஒரு அசெம்பிளி சீட் கூட தராமல், ஒரு மாநிலங்களவை எம்பி சீட் மட்டும் என்று உறுதிமொழி அளித்து அவரை அமைதிப்படுத்தியது திமுக. இதை பெரிதும் நம்பி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக ஒரு எம்பி சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இப்போது வழங்க மனசில்லையாம் இது ஒரு வாக்குறுதி மோசடி மட்டுமல்ல, அரசியல் நேர்மையின்மையையும் காட்டுகிறது.
திமுகவின் சூழ்ச்சிகள்: சேகர்பாபு முதல் வைரமுத்து வரை
இப்போது, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கமல்ஹாசனுக்கு எம்.பி பதவி வழங்க முடியாத சூழலை சொல்லி வேறு ஏதாவது தருவதாக முதலில் சேகர்பாபு, பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைரமுத்து போன்றவர்களை அனுப்பி, கமல்ஹாசனிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சித்தது. ஆனால், இவை அனைத்தும் ஒரு அரசியல் நாடகம் மட்டுமே.

கமல்ஹாசன் ஒரு எம்.பி.யாக இருந்தால் என்ன மாற்றம்?
கமல்ஹாசன் ஒரு திறமையான பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர். அவர் பாராளுமன்றத்தில் இருந்தால், தமிழகத்தின் குரலை தேசிய அளவில் பலப்படுத்த முடியும். அவரது வாதத் திறன், ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் நேர்மையான அணுகுமுறை பாராளுமன்றத்திற்கு ஒரு புதிய மரியாதையைக் கொண்டு வரும். கமல் ஹாசன் என்றால் சாதாரண நடிகர் மட்டுமல்ல. ஒரு சிறு நொடியில் காட்சியை புரிந்து, ஒரே டேக்கில் அசர வைக்கும் திறன் கொண்டவர். இரவு முழுவதும் விழித்து ரிகர்சல் செய்து, மறுநாள் படப்பிடிப்பில் முத்திரை பதிப்பவர். அப்படிப்பட்டவர் பாராளுமன்றம் சென்றால், தனது வாய்ப்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அவையையும் அவதானித்து மாற்றக்கூடிய யோசனைகளை முன்வைப்பார் என்பது நிச்சயம். மேலும், அவர் ஒரு பல்முகத் திறன்கள் கொண்டவர் என்பதால், பல துறைகளில் சிறந்த சட்டமியற்றுபவராக விளங்குவார்.
திமுக ஏன் கமல்ஹாசனை தவிர்க்கிறது?
இதன் காரணமாகவே திமுகவின் தலைமை கமல்ஹாசனை ஒரு சவாலாக கருதுகிறது. அவரது நேர்மையான குரல் மற்றும் சுயாதீரமான சிந்தனை திமுகவின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஒரு சவாலாக இருக்கும். அதே நேரத்தில், திமுக தனது உள் கட்சி வட்டாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறது. இதன் விளைவாக, கமல்ஹாசன் போன்ற தகுதிவாய்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு என். ராமுக்கு எம்.பி பதவி?
இதற்கு மாறாக, திமுக “மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு” என்று அழைக்கப்படும் என். ராமுக்கு எம்.பி பதவி வழங்க திட்டமிட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் சார்புடைய முடிவு. என். ராம் ஒரு சர்வதேச அளவில் அறியப்பட்ட பத்திரிகையாளர் என்பது உண்மை. ஆனால், அவர் ஒரு அரசியல்வாதியாக மாறுவது என்பது பொது மக்களின் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட கட்சி சார்புடையவராக மாறுவதைக் குறிக்கிறது.

திமுகவின் அரசியல் நாடகங்கள் மக்களுக்கு எதிரானது
திமுகவின் இந்த அரசியல் சூழ்ச்சிகள் மக்களின் நம்பிக்கையை மோசடி செய்வதற்கு சமம். கமல்ஹாசன் போன்ற தகுதிவாய்ந்தவர்களை புறக்கணிப்பது, திமுகவின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது. ஒரு கட்சி தனது உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், அது மக்களின் மீதான மோசடியாகும். இந்த விவாதம் தமிழ்நாட்டு அரசியலில் உள்ள உள்நோக்கங்கள், வாக்குறுதி மோசடிகள் மற்றும் தகுதிவாய்ந்தவர்களின் புறக்கணிப்பு பற்றிய ஒரு ஆழமான பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் வாக்கு(றுதி)கள் மேலும் சீரழியும்.


