கடசீல பிரியாணி – விமர்சனம்!

கடசீல பிரியாணி – விமர்சனம்!

நூறு கோடிக்கும் மேல் செலவு செய்து மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஸ்டார் வேல்யூ கொண்ட சில படங்களை விட மினிமம் பட்ஜெட்டில் வித்தியாசமான டைட்டிலை வைத்தே கவர்ந்து விடுவோருமுண்டு.. அந்த லிஸ்டில் இணைந்த படமே ‘கடசீல பிரியாணி’

படம் ஆரம்பித்ததுமே விஜய் சேதுபதி வாய்ஸில் ஓப்பன் ஆகிறது.. அடடே.. புதுஸா என்னவோ சொல்லப் போறாய்ங்க அப்ப்டி என்று ஏகப்பட்ட ஆர்வத்துடன் ஸ்கிரீனை பார்க்க ஆரம்பிக்கும் கண்களுக்கு முதலில் தெரியாது – இது ஒரு மாமூலான கதை இல்லை அதையும் தாண்டி வேற மாதிரி என்று.

ஒரு குடும்பம் . ஒரு அப்பா மூன்று பையன்கள். இன்னொரு குடும்பத்தை சேர்ந்தவர்களால் தன் அப்பாவை இழக்க நேரிடுகிறது. இதற்கு பழிக்கு பழிவாங்க துடிக்கும் குடும்பத்தில் இரண்டு அண்ணன்களையும் பலிகொடுக்க வேண்டியதாகிறது. மீதம் இருக்கும் பையன் எதிரி குடும்பத்தில் இருப்பவர்களை அழிக்கிறானா என்பதுதான் மீதி கதை. தெளிவான திரைக்கதையுடன் படம் போகிறது எனபது ஒரு ஆறுதல்.

புதுமுக இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரத் திரைப்படங்கள், இசை ஆல்பங்களை இயக்கியதில் கிடைத்த அனுபவத்தைப் வைத்து ‘கடசீல பிரியாணி’ மூலம் திரைப்பட இயக்குநராக நிஷாந்த் கலிதிண்டி அறிமுகமாகி இருக்கிறார்.

மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் தயாரிப்பு நிறுவனம் புதுப்படைப்பாளிகளுடன் களம் இறங்கி இருக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு  இரண்டுமே படத்தைக் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில் கடசீல பிரியாணி சூடு கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம்

மார்க் 2.75 / 5

Related Posts

error: Content is protected !!