காடன் திரை விமர்சனம்!

காடன் திரை விமர்சனம்!

காட்டு விலங்குகளில் எல்லோருக்கும் பிடித்த விலங்கு எது ? என்றொரு வாக்கெடுப்பு நடத்தினால் நிச்சயம் யானை=தான் ஜெயிக்கும் என்பதை சகலரும் ஒப்புக் கொள்வோம்.. அந்த யானைகள் ஒவ்வொன்றும் நம்மை அன்பாக அரவணைக்கும்.. . நாம் கொடுக்கும் தக்கணூண்டு பழத்தைக் கூட வாங்கி சாப்பிட்டப்படி ஆசீர்வாதம் செய்யும்.என்று மட்டும்தானே உங்களுக்குத் தெரியும்.. ஆனால் அந்த யானை வாழும் காட்டுப் பகுதி குறித்து தெரிந்துக் கொள்ள  உங்களுக்கு ஆர்வமிருகிறதா? அதாவது ஒரு காடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அங்கு யானைகள் வாழ்வது மிகவும் அவசியம். காடு என்ற சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு அவசியம். காட்டில் தாவரங்களை உண்டு (சுமார் 120 வகை தாவரங்களின்) விதைகளை பரப்புகின்றன. வெகுதுாரம் செல்வதால் விதைகள் பல கி.மீ., துாரம் வரை பரவும். காட்டில் பல்லுயிரின பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. யானையின் எச்சத்தில் பல வகையான பூஞ்சைகள் வளர்கின்றன. யானைகள் பல கி.மீ., நடந்து செல்வதால், காட்டில் வழிப் பாதைகளை உருவாக்குகின்றன என்பது போன்ற தகவல்களில் ஆர்வமிருந்தால் அப்படியானால் கண்டிப்பாக ’காடன்’படத்தைப் பாருங்கள் – அதுவும் குடும்பத்தோடு..! ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ள சிலருக்கு இந்த காடன்படம் பிடிக்காது என்பதையும் ஆரம்பத்திலேயே சொல்லி விடலாம்.

கதை என்னவென்றால் ரொம்ப சிம்பிள் – காட்டைக் காக்கும் யானைகள் துணையோடு வாழும் நாயகன். கூடவே வழக்கம் போல் அந்தக் காட்டை அழித்து நகரமாக்கி காசு சம்பாதிக்க ஆசைப்படும் ஒரு அரசியல்வாதி.. இந்த இருவருக்குமான காட்டுப் போராட்டம்தான் முழுக் கதை.

‘காடன்’ ரோலில் வரும் ராணாவின் நடிப்பை ரசிக்க முடிகிறது. ஆனால் அவர் இப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. விஷ்ணு விஷால் தனக்குக் கொடுக்கப்பட்டதைக் செய்திருக்கிறார். ஆனால் இந்த ரோலில் கமிட் ஆகி ஏற்கெனவே டேமேஜ் ஆன பெயரை மேலும் ஏன்தான் கெடுத்துக் கொண்டார் என்ற யோசனையை ஏற்படுத்தி விடுவதுதான் சோகம். இவ்விருவரைத் தவிர காடன் -னில் உள்ளோர் ஒவ்வொருவரும் வேறு ஸ்டேட் முகத்தைக் கொண்டிருப்பதால் ஏதோ டப்பிங் பட ஃபீல்ங் உருவாவதை தவிர்க்க இயலவில்லை..

அசோக்குமார் ராஜுவின் கேமராவால் காடன் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறான். ஆனால் மியூசிக் டைரக்டர் சாந்தனு மோய்த்ரா தன் பங்களிப்பை முழுசாகக் கொடுக்க தவறி விட்டார்.

வழக்கம் போல் அது சரியில்லை.. இப்படி பண்ணி இருக்கலாம் என்று நிறைய சொன்னாலும் கோவை ஈஷா மையம் சர்ச்சையை கோடிட்டிக் காட்டி வனத்தை அழிக்க விடாதீங்க என்று உரத்தக் சொல்வதால் ஓ கே லிஸ்டில் இடம் பிடிக்கிறான் இந்த காடன்.

மார்க் 2.75/5

Related Posts

error: Content is protected !!