உளவுத்துறையில் ஜாப் இருக்குதுங்கோ!

உளவுத்துறையில் ஜாப்  இருக்குதுங்கோ!

இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும்  உளவுத் துறையில் 2016-ஆம் ஆண்டுக்கான 320 குரூப் ‘சி’ ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் – கிரேடு–2) பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job sep 6

பணி: Junior Intelligence Officer (JIO) Grade – II (Technical)

காலியிடங்கள்: 320 (இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 190 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 43 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 57 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் +2 அல்லது 2 ஆண்டு ஐடிஐ பிரிவில் ரேடியோ டெக்னீசியன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 18 – 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ஆண் விண்ணப்ப தாரர்களுக்கு ரூ.50. இதனை இணையதள செலான் மூலம், ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2016

மேலும், முழுமையான விவரங்கள் அறிய   ஆந்தை வழிகாட்டி   என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

error: Content is protected !!