விமான நிலைய ஆணையத்தில் வேலை.. -லட்சத்தில் சம்பளம்..-496 பணியிடங்கள்..!

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. -லட்சத்தில் சம்பளம்..-496 பணியிடங்கள்..!

ந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 496 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் துவங்கியுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இதோ👇

மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாடு முதல் விமான போக்குவரத்து சார்ந்த பணிகளில் காலியாகும் பணியிடங்களை இந்த ஆணையம் அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு -Air Traffic Control) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணிக்கு 496 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது பிரிவில் 199 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் பிரிவில் 49 பேரும் ஒபிசி பிரிவில் 140 பேரும் எஸ்.சி பிரிவில் 75 பேரும் எஸ்.டி பிரிவில் 33 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இயற்பியல் மற்றும் கணக்கு பாடங்களுடன் கூடிய பி.எஸ்.சி (சயின்ஸ்) பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்து இருக்க வேண்டும். பி.இ/ பி.டெக், / பி.எஸ்.சி . (Engg.) ஆகிய பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் போதுமான கல்வி தகுதியுடன் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு?:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 40,000 முதல் 1,40,000- வரை கிடைக்கும். ஆண்டுக்கு தோராயமாக ரூ.13 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும். மத்திய அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?:

இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து, ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். கணிணி வழியில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 30.11.2023 கடைசி நாள் ஆகும்.

கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆந்தை வேலைவாய்ப்பு என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!