ஆன்லைனில் பரப்பப்படும் ‘ AI Deep Fake’-ராஷ்மிகா மந்தனா வேதனை!

ஆன்லைனில் பரப்பப்படும் ‘ AI Deep Fake’-ராஷ்மிகா மந்தனா வேதனை!

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . அதிலும் குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.தற்போது ராஷ்மிகா ’புஷ்பா 2’ ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்..இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவை மார்பிங் செய்து, கிளாமர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் இதன் ஒரிஜினல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஷாரா படேல் என்ற நடிகை தான் அந்த வீடியோவில் ஒரிஜினலாக இருப்பது என்றும், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து இந்த வீடியோ மார்பிங் செய்து வெளியாகி உள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட தொழில் நுட்பம் வளர வளர அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதை நமக்கு உணர்த்தும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உளவு அமைப்பான FBI ஏற்கெனவே கவலை தெரிவித்து இருந்தது.AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகில் அசுர வேகம் எடுத்துள்ள நிலையில் அதன் மூலம் மனிதர்களுக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதில் ஒரு பிரச்னையாக AI மூலம் உருவாக்கப்படும் போலியான படங்கள் மற்றும் வீடியோ மாறியுள்ளது.. இதற்காக சைபர் குற்றவாளிகள் நம்முடைய சாதாரண புகைப்படங்களை எடுத்து அதை உருமாற்றி Explicit Content எனப்படும் போலியான ஆபாச படங்களாக மாற்றுகிறார்கள் என்று FBI தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் பின்னர் சமூகவலைதளங்கள், ஆபாச இணையதளங்கள் போன்றவற்றில் பதிவேற்றப்பட்டு மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகையாக எண்ட்ரி ஆன காலம் தொட்டு ஏகப்பட்ட கேலிகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வரும் ராஷ்மிகா, தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் பல போலியான தகவல்களை நேர்காணல்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிப்படையாகப் பேசி தெளிவுபடுத்தி இருக்கிறார்..1

அவ்வகையில், சமீபத்தில் ராஷ்மிகா லிஃப்ட்டில் இருந்து வெளியே வருவது போன்ற போலியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட பலரும் அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது ‘Deep Fake’ செய்யப்பட்ட வீடியோ என்று தெளிவுபடுத்தி வருகின்றனர்.

அதை வருத்தத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா, “இதைப் பகிர்வதில் மிகவும் வேதனையடைகிறேன். ஆன்லைனில் பரப்பப்படும் போலியான ‘Deep Fake’ வீடியோவைப் பற்றி பேசியே ஆக வேண்டும். உண்மையில் இது எனக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் என்னுடன் எனக்குப் பாதுகாப்பாக, ஆதரவாக இருக்கும் என் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. நான் பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும்போது இது போல் எனக்கு நடந்திருந்தால், அதை நான் எப்படி எதிர்கொண்டிருப்பேன் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. இதுபோல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் கும்பல்களை விரைவில் கண்டுபிடித்து, பொதுமக்களிடம் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இதன் ஒரிஜினல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஷாரா படேல் என்ற நடிகை தான் அந்த வீடியோவில் ஒரிஜினலாக இருப்பது என்றும், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து இந்த வீடியோ மார்பிங் செய்து வெளியாகி உள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது சட்டப்படி குற்றம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் அவர் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!