அமேசான், பிளிப்கார்டுகளின் ஆட்டத்தை அடக்க வருது ஜியோ மார்ட்!

அமேசான், பிளிப்கார்டுகளின் ஆட்டத்தை அடக்க வருது ஜியோ மார்ட்!

எந்த தொழில் எடுத்தாலும், அதில் அதிரடியான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் கொடுத்து மக்களை தன் வசம் ஈர்க்கும் வல்லமை படைத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அந் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் இணக்கமான நபரும் கூட. இந் நிலையில், நீண்டகாலமாக வரும் வரும் என்று சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட், இயங்கலை சில்லறை விற்பனை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

உலக அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 மாதங்களுக்கு முன்பு வீழ்ச்சி யடைந்தது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவால் அந்நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தச் சரிவை ஈடு செய்வதற்காக புதிய வியாபாரத்தை தொடங்க நினைத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் விற்பனை செய்து, அதனை வீடு தோறும் டெலிவரி செய்யும் திட்டத்தை மும்பையில் அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து 10 பில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதைத்தொடர்ந்து ஜியோமார்ட் தொடர்பான அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். ஆனால் ஆன்லைனில் அத்தியாவசிப் பொருட்கள் டெலிவரி சேவை எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.

மேலும் கொரோனா பொதுமுடக்கம் முடிவதற்குள் அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரி சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவின் 200 நகரங்களில் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வந்து இலவச டெலிவரி கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை யொட்டி தங்கள் இணையத்தில் மளிகைப் பொருட்கள் மற்றும் பண்னை பொருட்களையும் விற்பனை செய்வதாகவும், பண்னை பொருட்கள் நேரடியாக ஒத்துழைப்பு தரும் உழவர்களிடம் இருந்து பெறப்படும் என்ரும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
நமது பகுதியில் சேவை இருக்கிறதா? சரி எப்படி நாம் இந்த தளத்தில் சென்று பொருட்களை வாங்குவது என்பதற்கு https://www.jiomart.com என்ற இணைய முகவரியை நமக்கு தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் தேவைக்கான பதிவினை செய்யும் போது, ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டினைக் கேட்கிறது. அதன் பின் உங்களது பகுதிகளில் சேவை இருக்கிறதா? இல்லையா? என்று தெரிவிக்கிறது. இப்போதைக்கு இது நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டது. விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் படிப்படிப்பயாக பிற சேவைகளை தொடங்கலாம் என்றும் இப்படி ஜியோமார்ட்டின் சேவை அமலுக்கு வந்ததும் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் உள்ளூர் கடைகளின் விற்பனைக்கு கடும் போட்டி இருக்கும் என்றும் நம்பலாம்

Related Posts

error: Content is protected !!