நீட் தேர்வு : செப்.13-ம் தேதிக்கு மாற்றம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப். 13-ம் தேதி நடைபெறும் என்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவல் இன்று வரை குறையாத நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்தது. இதையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
இக்குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளதையடுத்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப். 13-ம் தேதி நடைபெறும் . ஜே.இ.இ., முதன்மை தேர்வு செப்.1- முதல் துவங்கி செப்.6-ம் தேதி வரை நடைபெறும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/aanthaireporter/status/1279059122533486592