மலேசியா ; புதிய பிரதமராக இஸ்மாயில் தேர்வு!

மலேசியா ; புதிய பிரதமராக இஸ்மாயில் தேர்வு!

லேசியாவின் புதிய பிரதமராக துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமது, கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திடீரென பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின், தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமராகினார்.

ஆனால் தற்பொழுது கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, மொகைதின் யாசின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பதவி விலகினார். இதனையடுத்து, துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூபை, பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்பு, மலேசியாவின் 9 ஆவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டதுடன் இன்று பிற்பகல் இவருக்கான பதவியேற்பு விழாவும் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!