சமூக வலைத்தளப் பதிவுகளை வைத்து பொதுநல மனுவா?- மும்பை ஐகோர்ட் அப்செட்!

சமூக வலைத்தளப் பதிவுகளை வைத்து பொதுநல மனுவா?- மும்பை ஐகோர்ட் அப்செட்!

லக மாற்றங்களுக்கு அமைய தற்கால மனித சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் மனிதர்களின் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் பரவும் பல்வேறு தக்வல்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன. அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன. சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தும்போது வளர்ச்சி ஏற்படுகிறது. தவறாகப் பயன்படுத்தும் போது அல்லது உரிய முறையில் பயன்படுத்தத் தவறும் போது வளர்ச்சிக்குப் பதிலாகத் தடையும் சீரழிவும் ஏற்படுகின்றன. இதனால், இந்தச் சாதனங்களில் தவறு கிடையாது. அவற்றைப் பயன்படுத்தும் நமது முறையில்தான் சரியும் தவறும் உள்ளது

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபத்தான அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 பேர் இறந்து போவதை தடுக்க, மகாராஷ்டிர அரசுக்கு உத்தர விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோர்படே என்பவர், மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு செய்தார்.

ஏற்க முடியாது

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவில் குறிப்பிடபட்டுள்ள இறந்தவர்களின் விவரங்கள், சமூக வலைத்தளங்களில் திரட்டியதாக கூறவே, நீதிபதிகள் அதைக் கண்டித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் எந்த ஒரு தகவல்களையும் பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

error: Content is protected !!