ரசிகர்களே இல்லாத கிரவுண்டில் ஆரம்பமாகுது ஐ பி எல் கிரிக்கெட் போட்டி!

ரசிகர்களே இல்லாத கிரவுண்டில் ஆரம்பமாகுது  ஐ பி எல் கிரிக்கெட் போட்டி!

விளையாட்டு பிரியர்களின் திருவிழாவான ஐ.பி.எல். கிரிக்கெட் 14-ஆவது போட்டி தொடரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் 6 நகரங்களில் மட்டும், பார்வையாளர்கள் அனுமதி இல்லாமல் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் நடைபெறுகிறது. மும்பை இந்தியன், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைஸ் ஐதரபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகள் இதில் பங்கு கொள்கின்றன.

முதல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

லீக் கட்டத்தில், ஒவ்வொரு அணியும் நான்கு மைதானங்களில் போட்டிகளில் விளையாடும். 56 லீக் போட்டிகளில், தலா 10 போட்டிகள் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரில் நடைபெறும், 8 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும். இந்த ஐ.பி.எல். இல், அனைத்து போட்டிகளும் நடுநிலை இடத்தில் நடைபெறும், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் எந்த போட்டியையும் விளையாடாது. பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆட்டமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதுவே ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் இருந்தால், முதலாவது ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மொத்தம் 11 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆரம்ப பேராவில் குறிப்பிட்டது போல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!