ஐ.பி.எல் 2021 போட்டிகள் என்றைக்கு? எங்கே? பட்டியல் முழு விபரம்!

ஐ.பி.எல் 2021  போட்டிகள் என்றைக்கு? எங்கே? பட்டியல் முழு விபரம்!

ன்று வரை தொடரும் கொரோனாத் தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளை, இந்த ஆண்டு வழக்கம்போல் இந்தியாவில், ஏப்ரல் – மே மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வந்த நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஐ.பி.எல் 2021 போட்டிகள் துவங்கும் என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் சென்னையில் 14-வது ஐ.பி.எல் போட்டிகள் துவங்கும். ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கும் முதல் ஐ. பி.எல் போட்டியில் சென்னை மைதானத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகள் நடைபெறும்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் உள்ள எந்த அணிக்கும் இம்முறை சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது. தொடரின் முதற்கட்ட போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகுதியில் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Posts

error: Content is protected !!