பன்னாட்டு மலை நாள்!

பன்னாட்டு மலை நாள்!

யிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் முக்கிய பங்கைப் பெறுகின்றன. ‘சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி’ என்று மலைகள் வர்ணிக்கப் படுகின்றன. மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘மலைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன. காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றன. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 11ம் தேதி உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

அதாவது நாம் வாழும் இந்த பூமி பல கோடி ஆண்டுகள் பல மாற்றங்களை கண்டுதான் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை உருவானது. மூன்று பங்கு கடல் நீராகவும், ஒரு பங்கு நிலப்பரப்பாகவும் கொன்ட இந்த உலகத்தில் முதலில் நீர்வாழ்வனவும், பின் நீர் நில வாழ்வனவும், அதன்பின் நில வாழ்வனவும் பின் ஊர்வன, பறப்பன என ஒன்றன் பின் ஒன்றாய் தோன்றி பரிணாம வளர்ச்சி கண்டு கடைசியில்தான் மனிதன் தோன்றினான். மற்ற மிருகங்களைப் போலவே கூட்டமாய் குகையில் வாழ்ந்த மனிதன் வேட்டையாட கல், கம்பு பயன்படுத்தினான். தற்செயலாக நெருப்பையும் கண்டுபிடித்தான்.

கூர்மையான ஆயுதங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி வேட்டை, விவசாயம் என அறிவு சார் வாழ்க்கைக்கு வந்தபோது மானம் மறைக்க இலை, தழைகளையும், விலங்குகளின் தோல்களையும் பயன்படுத்தி வந்தவன் பருத்தி, நூல், துணி என தொழில் துறையில் படிப்படியாக பயங்கர வளர்ச்சி கண்டு தற்போது அணு ஆயுதப் போட்டியில் வந்து நிற்கிறான். மனித இனம் அவதரிக்கும் முன் தோன்றிய பல விதமான தாவரங்களும், விலங்குகளும், பறவை இனங்களும் போட்டியும், பொறாமையும், பேராசையும் கொண்ட மனிதனோடு மல்லுக்கட்ட முடியாமல் பூமியை விட்டு அழிந்து, ஒழிந்து போய் விட்டன. எஞ்சி, மிஞ்சி இருக்கும் இயற்கையையும், இருப்பவற்றையும் காக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கம்.

இதனிடையே இந்த மலை என்பதற்கான குறிப்பான வரையறை ஏதும் இல்லை… உயரம், கன அளவு, வடிவம், சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என பல அம்சங்களை கணக்கில் கொண்டே மலை வரையறுக்கப்படுகிறது. ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும் மலைப் பகுதிகளைக் கொண்டவை. உலகின் மொத்த நிலப்பரப்பில் 24% மலைகளாகும். உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன . ஆனால் மலை என்றாலே உயர்ந்தவை… எரியும் எரிமலையும் உண்டு, பனிமலையும் உண்டு.

நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இரண்டறக் கலந்த குறிஞ்சி நிலப் பகுதியாக விளங்குகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப் பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், செயற்கைக் காரணங்களால் தூண்டப்பட்டு நிகழ்ந்துள்ளன. நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இரண்டறக் கலந்த குறிஞ்சி நிலப் பகுதியாக விளங்குகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப் பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், செயற்கைக் காரணங்களால் தூண்டப்பட்டு நிகழ்ந்துள்ளன.

பாறைகளின் மீது அமைந்துள்ள இந்த மலையின் மீது விதிமுறைகளை மீறிப் பல அடுக்குமாடி கட்டிடங்களும், போதிய மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாத வளர்ச்சித் திட்டங்களும் மலைச்சரிவையும் உயிர்ப்பலியையும் ஏற்படுத்திவருகின்றன. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின்படி, உலகில் உள்ள பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறுகிறது. நம் எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கைக்காக மட்டுமல்லாமல் இந்த மலைகளை நம்பி வாழும் உயிரினங்கள், தண்ணீரை வழங்கிவரும் காடுகளை அழிவின் கைகளில் இருந்து காக்க வேண்டும்.

இனி மலைகள் – சில டிட் பிட்ஸ்

♪ உலக நிலப்பரப்பில் 27% பங்கிற்கு மலைகள் பரந்து வியாபித்துள்ள அதேவேளை உலக மக்களில் 12% பேர்களுக்கு தேவையான வாழ்க்கையை மலைகளே வழங்குகின்றன. ஆனால் உலகில் 50% -ற்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மலை வளங்களிலேயே தங்கியுள்ளனர்.

♪ மலை வாழ் மக்களில் 80% ற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்.

♪ உலகில் 80% ற்கும் அதிகமான தூய நீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது.

♪ அருகிவரக் கூடிய பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் மலைகள் உள்ளன.

♪ பல நாடுகளில் குளிர்காலப் பனியை மலைகள் தன்வசம் வைத்துக்கொள்கின்றன; பின்பு வசந்த காலத்தின்போதும் வெயில் காலத்தின்போதும் தேவைப்படும் ஈரப்பதத்தை மெதுவாக வெளிவிடுகின்றன.

♪ தமிழகத்தில் மலைகளை, தாயாக, அரசியாகப் பார்க்கின்றோம். ஊட்டியை மலை வாழிடங்களின் ராணி என்றும், கொடைக்கானலை மலை வாழிடங்களின் இளவரசி என்றும், வால்பாறையை மலைகளின் இளவரசி என்றும், ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைத்து பெருமைப்படுத்துகின்றோம்

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!