இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது!.

நடப்பு ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு வெளிநாட்டினர் இந்திய பங்குகளில் முதலீடு செய்வதும் அதிகரித்த போதிலும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த காரணத்தினால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.4% குறைந்து இருக்கிறது. இதை அடுத்து உலக நாடுகளிலேயே தங்கள் சொந்த நாணயத்தின் மதிப்பு அதிகம் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது.
2020 21 ஆம் ஆண்டில் மாதம் வரையிலான காலத்தில் வெளிநாட்டு பணம் இந்திய பங்குகளில் 36 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது எதிர்காலத்தில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 81 புள்ளி 7 பில்லியன் டாலராகவும் இருந்தது இது சமீப காலத்தில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும்.பிரிக்ஸ் நாடுகள் என்றழைக்கப்படும் பிரேசில் ரஷ்யா இந்தியா சீனா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் சொந்தகரன் சிக்கலில் இந்தியாவின் கரன்சி யான ரூபாய்தான் டாலருக்கு எதிரான அன்னியச் செலாவணி மாற்று மிகவும் கூடுதலான அளவுக்கு தனது மதிப்பு விழுந்திருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு 2.04 சதவீதம் குறைந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து உலக சந்தையில் இருந்து டாலரை வாங்கி குவித்து வருகிறது தற்போது டாலரை அதிக இருப்பு வைத்திருக்கும் நாடுகளில் நாலாவது இடத்தில் இந்தியா உள்ளது முதல் இடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் ஜப்பானும் மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் ஆகிய எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இந்தியாவில் பயன்படுத்தப்படும் டீசல் பெட்ரோல் ஆகியவை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது அதனால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்வு இந்தியாவில் பணவீக்கமும் மொத்த விலை குறியீட்டு எண் விகிதம் உயர்ந்து வருகிறது.
இந்த இரண்டு உயர்வு காரணமாக ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கிக்கு இணையாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் என்ற நிதி அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் அதன் வழியாக இந்தியாவை ரூபாயின் மதிப்பு இன்னும் குறையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது அதன் காரணமாக இந்தியாவில் பணவீக்கமும் பொருள்களின் விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.