உலக வங்கியின் உயர்ந்த பொறுப்பில் இந்திய பெண்மணி!

உலக வங்கியின் உயர்ந்த பொறுப்பில் இந்திய பெண்மணி!

உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும். இந்நிலையில் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் (Managing director) தலைமை நிதி அதிகாரியாகவும் (chief financial officer) இந்தியரான அன்ஷுலா காந்த் நியமிக்கப் பட்டுள்ளார்.

பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்ற அன்ஷுலா காந்த் நிதி மற்றும் வங்கித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை நிதி நிர்வாகியாக பணியாற்றியவர்.

அவரது தலைமை பண்பு, கருவூலம், நிதி தொடர்பான ஒழுங்குமுறை, இணக்கம் மற்றும் செயல் பாடுகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் அன்ஷுலா காந்த் திறமை வாய்ந்தவர்.

அன்ஷுலா காந்த் நியமனம் குறித்து உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் வெளியிட்ட அறிக்கையில் ‘‘அன்ஷ்லா காந்தை உலக வங்கியின் நிர்வாக குழுவிற்கு வரவேற்கிறேன். உலக வங்கியின் மேம்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிக்க அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’’ என்று டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி மற்றும் இடர் மேலாண்மை பிரிவின் தலைவராக அன்ஷுலா காந்த் பொறுப்பேற்பார். அவர் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து பணியாறி நிதி ஆதாரங்களை திரட்டுவார். அன்ஷுலா காந்த் தன் அறிக்கைகளை உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸிடம் நேரடியாக சமர்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!