இந்திய வம்சாவளி சகோதரிகளுக்கு அமெரிக்கா சயன்ஸ் ரிசர்ச் போட்டியில் பரிசு!
அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 2016 சீமென்ஸ் கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் நடைபெற்றது. இது உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சிக்கான போட்டியாகும். மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டியில் வாஷிங்டன்னில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்வேறுபள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்தப்போட்டியில் தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்பித்தனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரட்டை சகோதரிகளின் உட்பட 3 பேரின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கை ேதர்வு செய்யப்பட்டு ரூ.67 லட்சம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிளானோ பள்ளியை சேர்ந்த 11வது கிரேட் பிரிவு மாணவிகளும், இரட்டை சகோதரிகளுமான ஸ்ரேயா மற்றும் ஆத்யாபீசம் ஆகியோர் சமர்பித்த மூளைக்கோளாறு உள்ளிட்ட உடல் நலப்பிரச்னைகளை கண்டறிவது தொடர்பான ஆய்வுக்கட்டுரை இந்த ஆண்டுக்கான பரிசை வென்றுள்ளது.
இது குறித்து பேசிய இரட்டை சகோதரிகள், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது நெருங்கிய உறவினர் மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அது உடனடியாக கண்டறியப்படவில்லை. இந்நிலையில அவர் தற்கொலை செய்துகொண்டார். காலங்கடந்து நோய் கண்டறிதல் மற்றும் சரியான கவனம் செலுத்தாமையே தற்கொலைக்கு காரணமாகும்.
மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனை தடுப்பதற்காகவே இந்த ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டோம். எங்களது இந்த கண்டுபிடிப்பு இறந்த எனது மாமாவிற்கு சமர்பிக்கப்படுகிறது” என்றனர். தனிநபர் பிரிவில், ஓரிகன் எபிஸ்கோபல் பள்ளியை சேர்ந்த சீனியர் மாணவர், வினீத் எடுபுகந்தி உட்கொள்ளக்கூடிய பேட்டரியை கண்டுபிடித்துள்ளார். இதை உட்கொண்ட பின்னர் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை மானிட்டரின் மூலம் கண்டறியலாம்.


