இன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா? அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்!

இன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா? அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்!

நம் நாட்டின் பொருளாதார நிலை சீராக உள்ளது. அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் கூடுதலான வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. ஆனாலும் சிறு சிறு குறைபாடுகள் களையப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரம் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், இதனை சரி செய்ய சாதாரண நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது எனவும் நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜுவ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் எதிர் கொண்டுள்ள மோசமான நிலையை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டு களில் இது போன்ற நிதி நெருக்கடியை இந்தியா சந்தித்தது இல்லை என்றும், ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.

கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்னை களுக்கும் விரைவாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

* வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.

* இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறுசிறு குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப் பட்டுள்ளது. கம்பெனிகள் பலன் பெறும் வகையில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான சட்ட திருத்தங்கள் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். தொழில் துவங்கவதற்கான வாய்ப்புகள், மற்றும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் பெருக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்டகால குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.

* வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் தரப்படும்.

கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே கருதப்படும்.

தொழில் முனைவோருக்கான கடன் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்படும். வங்கி மூலம் கடன் பெறுவோர் எளிய முறையில் வங்கிகளை அணுக முடியும். ஆன்லைன் மூலம் கடன் விண்ணப்பிப்போருக்கு விரைவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

* ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.

* பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்.

* வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில்தொடங்க, வீடுகள் வாங்க, வாகனங்கள் வாங்க, கடன் பெறுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.

error: Content is protected !!