உக்ரைன் – ரஷ்ய பிரச்சினையில் இந்தியா நடுநிலை வகிக்குமாம்!

உக்ரைன் – ரஷ்ய பிரச்சினையில் இந்தியா நடுநிலை வகிக்குமாம்!

க்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷ்ய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே உக்ரைன் – ரஷ்ய பிரச்சினையில் இந்தியா நடுநிலை வகிக்கும் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதே சமயம் இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்தியா பலமுறை வரலாற்றில் அமைதியைத் தேடித் தந்துள்ளது. இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம். தற்போது ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சைக் கேட்பார் எனத் தெரியவில்லை, ஆனால் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜி. ரஷ்யாவுடன் அவருக்கு உள்ள உறவைப் பயன்படுத்தி போரை நிறுத்த, புதினுடன் இந்தியப் பிரதமர் மோடி பேச வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், பதற்றம் அடைய வேண்டாம் என்று இந்திய அரசு தூதரகம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

டெல்லியிலுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் இந்தியர்களை எப்படி அங்கிருந்து அழைத்து வருவது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னதாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும். பதற்றமான நிலை கவலையை தருகிறது என ஐ.நா. பாதுகாப்பு சபை இந்திய பிரதிநிதி திருமூர்த்தி கூறியுள்ளார். இச்சூழலில்தான் இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்தியா பலமுறை வரலாற்றில் அமைதியைத் தேடித் தந்துள்ளது. இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம். தற்போது ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சைக் கேட்பார் எனத் தெரியவில்லை, ஆனால் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜி. ரஷ்யாவுடன் அவருக்கு உள்ள உறவைப் பயன்படுத்தி போரை நிறுத்த, புதினுடன் இந்தியப் பிரதமர் மோடி பேச வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Related Posts

error: Content is protected !!