மக்கள் தொகையில் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா சீனாவை முந்திடுமாம்!

மக்கள் தொகையில் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா சீனாவை முந்திடுமாம்!

ர்வதேச அளவில்; அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஐநா வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் மக்கள்தொகை 143 கோடியாகவும் இந்தியாவில் 137 கோடியாகவும் இருந்தது. அதேபோல 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை மேலும் 27.30 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. மேலும் 2027ஆம் ஆண்டு, சீனாவின் மக்கள் தொகையைத் தாண்டி இந்தியா முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போதோ 2023 அல்லது 2024ஆம் ஆண்டே சீனாவை இந்தியா முந்திச்சென்றுவிடும் என சீன மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீனாவில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள், அண்மையில் வெளியிடப்பட்டன. அதன்படி சீனாவின் மக்கள் தொகை 143 கோடியிலிருந்து 141 கோடியாகக் குறைந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் குறைந்துவரும் மக்கள்தொகையால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், மக்களின் நுகரும் தன்மையும் சரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அறியப்படும் சீனாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியைக் காணும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவின் பிறப்பு விகிதமானது வரும் ஆண்டுகளில் குறையும் சூழலில், இந்தியாவில் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 2024ஆம் ஆண்டுக்குள் சீனாவை மிஞ்சி இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!