உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்!

உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்!

நம்மில் பெரும்பாலான தாய்மார்கர்கள் குழந்தை கொழு கொழு என்று குண்டாக இருப்பதுதான் ஆரோக்கியம் என நினைக்கின்றனர். இதனிடையே பிறந்த முதல் ஆண்டிலேயே குண்டாக வளரும் குழந்தை பெரியவனாகும் போதும் குண்டாக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் அதிக எடையோடு வளரும் போது அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படுகின்றன என்பதைப்பற்றி பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் எடை அதிகமாவதால் அதிக சோர்வு, விளையாட சோம்பல், எந்த நேரமும் டி.வி. பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது, படிப்பில் அக்கறையின்மை. இவை எல்லாவற்றையும் விட கால் எலும்புகள் வளைந்து போதல் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் இதெல்லாம் விட பெரிய ஆபத்து அவர்களுக்கு சிறுவயதிலேயே 5 வயது முதல் வரும் அதிக ரத்த அழுத்தம். அது போக சர்க்கரை வியாதி (டைப் இரண்டு). பெரியவர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும் வரும் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகும்.

குண்டான குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்தம் குழந்தைகளுக்கு வந்திருப்பது கூட பெற்றோர்களுக்கு தெரியாது. நவீன சிகிச்சை முறையில் இந்த ரத்த அழுத்த நோயை இப்போது குணப்படுத்தி விடலாம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனால் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் காட்டி ரத்த அழுத்த நோயும், சர்க்கரை நோயும் இருக்கிறதா? என சோதனை செய்து பார்த்த பின்னர் உடனே சிகிச்சையை தொடங்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

இந்நிலையில் உலகம் முழுவதும் குண்டு குழந்தைகள் பற்றி தி நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆப் மெடிசின் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 1.43 கோடி குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர். முதலிடம் பிடித்த சீனாவில் குண்டு குழந்தைகள் எண்ணிக்கை 1.53 கோடி ஆகும். .

தற்போது உலகம் முழுவதும் 200கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் உடல்பருமன் நோயால் அவதிப்ப டுவது தெரிய வந்தது. அதே போல குண்டுமனிதர்கள், குழந்தைகளின் இறப்பும் அதிகமாகி வருவதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் உடல் பருமன் காரணமாக உயிரிழந்தனர்.

உடல் எடை அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அதிகமான உடல் எடை கொண்ட பெரியவர்கள் பட்டியலில் எகிப்து முதலிடத்தில் இருக்கிறது. உடல் எடை அதிகமானவர்கள் மிக குறைவாக உள்ள நாடுகளில் வங்கதேசும், வியட்நாமும் உள்ளன.

error: Content is protected !!