ஆர்க்டிக் பெருகடலில் ஐஸ் காணாமல் போய் விடும்!

ஆர்க்டிக் பெருகடலில் ஐஸ் காணாமல் போய் விடும்!

உலகில் உள்ள பெருங்கடல்களில் சிறிய, ஆழம் குறைவான பெருங்கடல் இது. பெரும்பாலான பகுதியில் 2 மீ உயரத்திற்கு உறைபனி மிதக்கும். இப்பெருங்கடலின் நடுவே வடதுருவம் உள்ளது. இதன் பரப்பு 1,40,89,600 சதுர கி.மீ. சராசரி ஆழம் 1,330 மீ. (4,360 அடி). சராசரி மேலே படிந்துள்ள பனிப்படிவத்தின் திண்மை 1.5 _ 3 மீ (4.9 _9.8 அடி). மிகக் குறைவான வெப்பம் – 700நீ (-940யீ). கிரீன்லாந்து வடமுனையில் பெரிய பனிப்பாறைகள் உடைந்து கிரீன்லாந்திற்குத் தெற்கே வடஅட்லாண்டிக் கடலில் சென்றடைகின்றன. அவைகளில் சில 120 மீ (400 அடி) கடல் மட்டத்திற்கு உயரமானவை. அவற்றின் சிறு பகுதியே கடல் நீருக்கு மேல் தெரிவதால் அவை கப்பலுக்கு ஆபத்தை உண்டாக்கும்.

sea jun 5

வடக்கில் ஒளி:-

இருண்ட இரவுகளில் ஒளி மிக்க பல வண்ணங்கள் கொண்ட வைகறை ஒளியைப் (Aurora) பார்க்கலாம். அது பனிக்காலத்து இடையில் மிக்க ஒளியுடன் தெரியும். ஏனெனில், அப்பருவத்தில் அங்கே சூரியன் உதிக்காது. அவ்வொளி 24 மணி நேரமும் சூரியன் ஒளி வீசும் கோடைக்காலத்தில் தெரியாது.

ஆர்க்டிக் மக்கள்:-

இங்கு 8 இலட்சம் பூர்வ குடிகள் வாழ்கின்றனர். தற்போது அவர்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு சிற்றூர்களில் வாழ்கின்றனர். இங்கு தெற்கே இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொறியியலாளர்களும், வியாபாரிகளும் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் பனியால் சூழப்பட்டிருக்கும் ஆர்க்டிக் கடலில் ஐஸ் தன்மை இல்லாமல் போகும் என அமெரிக்க கேம்பிரிட்ஜ் பல்கலை., கூறியுள்ளது. இது போன்று நடப்பது கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் தற்போது வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேம்பிரிட்ஜ் பேராசிரியரான பீட்டர் வாதம்ஸ் கூறியிருப்பதாவது: அமெரிக்க பனி கண்காணிப்பு மற்றும் பனி தகவல்கள் சேகரிக்கும் மையம் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதன்படி, ஜூன் 1 ல் 11.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பனி படர்ந்திருப்பது அறியப் பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 12. 7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பகுதி பனி இருந்தது. இது தற்போது 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பு குறைந்துள்ளது. இது தொடர்ந்து குறையும் பட்சத்தில் இந்த ஆண்டிலோ அல்லது அடுத்து ஆண்டிற்குள்ளோ பனி இல்லா பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதுவும் முழுமையாக மாறாது. ஆர்க்டிக் கடலின் மத்திய அல்லது வடக்கு பகுதியில் இது நிலவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த ஒரு லட்சம் ஆண்டிற்கு முன்னதாக இது போன்று நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போல் மற்றொரு ஆய்வில் பூமியும், செவ்வாயும் மிக அருகருகே இந்த மாதத்தில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.