டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS வாய்ப்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS வாய்ப்பு!

ந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேர வேண்டுமானால் Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வுக்கான (Common Written Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐ.பீ.பி.எஸ்) செயல்படுகிறது. இந்த அமைப்பு முதன் முதலில் பொதுத்துறை வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு நடத்தி வந்தது. கடந்த ஆண்டில் எழுத்து தேர்வுடன் பொது நேர் காணலும் நடத்தியது. ஐ.பீ.பி.எஸ். நடத்தும் பொது எழுத்து தேர்வு முடிவுகளை சில தனியார் வங்கிகளும் பயன்படுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதிகள்: 1. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர், வங்கி அமைந்துள்ள மண்டல மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லான் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட எதாவதொரு வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளில் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பின்னரே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2013

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.09.2013 வரை

செல்லான் படிவம் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்: 12.09.2013 வரை

அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச தேதி
: 21.09.2013 – 22.09.2013

மேலும் நேரமுகத் தேர்வு மற்றும் இலவச பயிற்சி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!