மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன்!- மராட்டிய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே சபதம்!

மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன்!- மராட்டிய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே சபதம்!

டந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வந்த மகாராஷ்டிராவின் முதலமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்ட சபையில் ஒரு எம்.எல்.ஏ. உயிரிழந்ததை அடுத்து, தற்போது அதன் பலம் 287 ஆக உள்ளது. உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் அவரது அணிக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே பதவி விலகி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டால் அது ஜனநாயக அரசியலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்றும், தகுதி நீக்க நடைமுறையானது சபாநாயகர் முன் நிலுவையில் இருப்பதை வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஷிண்டேவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்தநிலையில், மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும். ஆளுநரின் உத்தரவுப்படி மராட்டிய பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதை அடுத்து மக்களுக்கு உரையாற்றிய அவர், தனது பேச்சில் சோனியா காந்தி, சரத் பவாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், எதிர்பாராத விதத்தில் பதவிக்கு வந்தேன். அதே பாணியில் வெளியே செல்கிறேன். நான் நிரந்தரமாக போகப்போவதில்லை. இங்கேயே இருப்பேன். மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இதை சாதிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!