32°C
விளம்பரம்
Advertisement

maniப்பூர் கலவரம் என்று ஓயும் எனத் தெரியாது, அடுத்து இது போல எங்கு தொடங்கும் எனவும் தெரியாது!,

admin சேலம் Published: July 21, 2023 5 நிமிட வாசிப்பு Updated: July 22, 2023 Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



மலைப் பிரதேசங்களில் கனிம வளங்கள் இருப்பது அறிய வந்தால் அதை அரசு கண்டு கொள்கிறதோ இல்லையோ முதலில் கார்ப்பரேட்காரனின் கண்களை உறுத்தும். அடுத்ததாக அரசு அதை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும்… அவன் உள்ளே நுழைவான், அங்கிருக்கும் பழங்குடிகள் அதை எதிர்ப்பார்கள், நாட்டுக்கு நல்லது என்பான், எங்களுக்குத் தேவையில்லை வெளியே போ என்பார்கள். அரசு உங்களுக்கு வேறு இடம் தருகிறோம் தேச நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது என அச்சுறுத்தும், அவர்களின் எதிர்ப்பு போராட்டமாக மாறும். அரசு அவர்களை வெளியேற்ற தன் அசுர பலத்தைக் காட்டும், வேறு வழியில்லாமல் அவர்களும் ஆயுதத்தை எடுத்தால், அவர்கள் அன்றிலிருந்து தீவிரvaadhiகளாக அர்த்தம் கொள்ளப் படுவார்கள்…!

சுதந்திரத்துக்குப் பிறகான இத்தனை வருடங்களில் இது ஒன்றும் புதிதல்ல… அது போன்ற மற்றுமொரு நிகழ்வு தான் maniப்பூரிலும் நடந்து கொண்டிருக்கிறது. இம் மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மையான குகி இன மக்கள் மலைப்பகுதிகளிலும் மெய்தி இனத்தவர் பிற பகுதிகளிலும் இருக்கிறார்கள். பீசேபீ இம் மாநிலத்தில் காலூன்றியவுடன் மலைப் பிரதேசத்தை கையகப் படுத்த எடுத்த முதல் வேலை மெய்தி இன மக்களை வைத்தே குகி இன மக்களின் நிலத்தை வாங்குவது, ஆக்கிரமிப்பது, அபகரிப்பது அல்லது அது போல ஏதோ ஒன்று… ஆனால் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் பழங்குடிகள் வாழும் நிலப்பரப்பு அவர்களுக்குத் தான் சொந்தம் என வரையறை செய்துள்ளபடியால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது…

மெய்தேய் இன மக்களை, “பார்.. உன்னால அவன் மாவட்டத்துல நிலம் கூட வாங்க முடியல” என ஒரு பக்கம் வெறுப்பை தூண்டி விட்டு மறு பக்கம் அடுத்த குறுக்கு வழியில் இறங்குகிறது பீசேபீ… இருந்திருந்தாற் போல மாநில முதல்வர் போதைய ஒழிப்போம், போதையிலிருந்து மாநிலத்தைக் காப்போம், போதைக்கெதிரான போர் என தொடர்ந்து போகிற இடமெல்லாம் சொல்லுவதில் ஆரம்பித்து, குகி இன மக்கள் அதிகமாக சாகுபடி செய்யும் பாப்பியில் (Poppy) இருந்து போதை மருந்து தயாரிக்கப் படுகிறது என ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை அவர்களின் 19000 ஏக்கர் சாகுபடியை அழித்து விடுகிறது…!

அத்தோடு நிறுத்தாமல் மாநில முதல்வர் குகி இன மக்களை தொடர்ந்து சலுகைகள் பறிக்கப் படும் என எச்சரித்துக் கொண்டும் போதைப் பொருள் தொழில் செய்பவர்கள் என குற்றம் சாட்டிக் கொண்டும் கட்சிக்கே உண்டான திரித்துக் கட்டும் வேலையை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்க, குகி இனத்தவர் முதல்வர் சொல்வதை பலமாக எதிர்த்து வந்தனர்… பாப்பி அழிக்கப் பட்டதாக சொல்லப் பட்ட இம்ஃபால் மாவட்டத்தில் மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக போதை மருந்து கடத்துபவர்கள் வருவதாகவும் அவர்களுக்கு குகி மக்கள் தான் பாப்பியை விற்பதாக அடுத்த பிரச்சாரத்தை கையில் எடுக்கிறது ஆளும் கட்சி.. அதற்கேற்றாற் போல ஒரு ரெண்டாயிரம் பேரை சட்டவிரோதமாக வந்ததாக பிடித்து கணக்கு காட்டியது. இப்போது மெய்தேய் இன மக்கள் பர்மிய அகதிகளே திரும்பிப் போ.. என ஆரம்பிக்கின்றனர்… அவர்கள் உள்ளே நுழைந்ததற்கு காரணம் குகியினர் தான் என கொஞ்சம் கொஞ்சமாக மூளை சலவை செய்யப் படுகின்றனர்…!

ஆனாலும் கலவரத்தை உருவாக்க இந்தக் காரணம் போதாதே! அடுத்த பிரச்சாரம் எடுக்கப் படுகிறது… சுதந்திரத்துக்குப் பிறகு குகி சமூகம் மலைப் பகுதியில் இருந்ததால் பழங்குடி இனமாகவும், மெய்தேயி மக்கள் சமவெளியில் இருந்ததால் பட்டியல் இனத்தில் சேர்க்கப் பட்டு விட்டார்கள்… அது மட்டும் அல்ல, அவர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினாலும் அந்த சலுகைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் மெய்தேய் இன மக்களுக்கு மலைப் பகுதியில் நிலம் வாங்கும் உரிமை மறுக்கப் படுவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது என அடித்து விட, இந்த யுக்தி சரியாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது…!

சாதி ரீதியாக இருந்த புகைச்சல் அடுத்து மத ரீதியான நெருப்பாக உருமாறி ஆங்காங்கே உள்ளுக்குள் மட்டுமே கனன்று கொண்டிருந்தது… அப்படியே விட்டால் அதுவாக அணைந்து விடுமே! அப்புறம் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிரும் என்ற எண்ணத்துடன் குஜராத் கலவரத்தை உருவாக்கியது போல இங்கேயும் உருவாக்கி எண்ணிக்கையில் அதிகம் உள்ள இனத்தவன் தன்னை விட அளவில் குறைந்தவன் மேல் செலுத்தும் வன்முறையை வேடிக்கை மட்டும் பார்க்க ஆரம்பித்தது.மொத்த எண்ணிக்கையில் 60% இருக்கும் இந்து மெய்தேய் இன மக்களின் ஓட்டு தனக்கு வந்தால் போதும், குறைந்த அளவில் இருக்கும் குகி மற்றும் நாகா இன மக்களின் ஆதரவு தேவையில்லை என்பதால் இக் கலவரத்தால் அரசியல் லாபமேயொழிய நஷ்டம் இல்லை என்கிற கணிப்பும் பீசேபீக்கு இருக்கிறது…

நேற்று வீடியோ வெளி வந்த சம்பவத்தில் போலீசே தான் குகி இனப் பெண்களை மெய்தேய் இனத்தவரிடம் விட்டுச் சென்றது என்ற தகவலும் வந்தது. அரசbayangaraவாதம் என்பது இது தான்!! எதைச் சொன்னாலும் செய்து முடிக்க ராஜ கட்டளைக்கு சீருடையில் காத்திருக்கும் ரோபோக்கள் தான் உலகமெங்கும் பாதுகாப்புக்கென உருவாக்கப் பட்டிருக்கும் ராணுவம், போலீஸ் மற்றும் பிற இத்யாதிகள்… இதே maniப்பூரில் 2004-ம் ஆண்டு ‘இந்தியன் ஆர்mi ரேpe us என்ற பதாகையுடன் பாதிக்கப் பட்ட பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்தி உலகறியச் செய்தது நினைவிருக்கலாம்…!

இனக் குழுக்களுக்கான சண்டையில் இருந்து நாடுகளுக்கான சண்டை வரையில் வலியவனிடம் எளியவன் சிக்கினால் ஆணாக இருந்தால் அடித்துக் கொல்வதும் பெண்ணாக இருந்தால் வன்புணர்ந்து கொல்வதும் என்றுமே மாறாதது… அக்காலப் போரில் மன்னனின் வெற்றிகளை சிலாகித்து எழுதுவதில் என்ன ஆனந்தம் இருந்து விடப் போகிறது? சேர சோழ பாண்டியனிலிருந்து இருந்து சிலோனுக்கு அனுப்பிய அமைதிப்படை வரை அடுத்த நாட்டிற்குள் நுழைந்த உடன் அவனுங்க முதலில் செய்வது இந்த ரெண்டும் தான்… ராராசோழன் தெற்காசியாவைக் கட்டி ஆண்டான்னு எவனாச்சும் எழுதுனா செவுளு மேலயே அப்புலாம்னு தோணுவது இதற்காகத்தான்…மக்களின் பாதுகாப்பிற்காக என சொல்லப் படும் இவன்களே இப்படி இருந்தால், இவன்களின் அனுமதியுடன், மேற்பார்வையுடன் கட்டவிழ்த்து விடப் படும் கலவரமும் வன்முறையும் எப்படியிருக்கும் என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது… அதுவும் மதவெறியை மண்டை முதல் மல ஓட்டை வரை ஏற்றி விட்ட கும்பலை இறக்கி விட்டால் நடக்கும் கொடூரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது…! maniப்பூர் கலவரம் என்று ஓயும் எனத் தெரியாது, அடுத்து இது போல எங்கு தொடங்கும் எனவும் தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவன்கள் தாங்கள் நினைப்பதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வான்கள்… sanங்கி என்றொருவன்/ள் உங்கள் குடும்பத்திலோ, உறவிலோ, நட்பிலோ இருந்தால் உடனே விட்டு விலகி விடுங்கள், அவர்களை அசிங்கமாகப் பாருங்கள், அருவருப்பாகப் பாருங்கள்…!

“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால் அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம், அவர்கள் நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள், அவர்கள் துறவியைப் போல் பேசுவார்கள் ஆனால் கசாப்பு கடைக்காரன் போல நடந்துகொள்வார்கள்…” – டாக்டர் அம்பேத்கர்

மலர்வண்ணன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்