அடுத்த லிஸ்ட்ல யாரு என்று யூக விளையாட்டுக்கள் எல்லாம் நடக்கும்!

அடுத்த லிஸ்ட்ல யாரு என்று யூக விளையாட்டுக்கள் எல்லாம் நடக்கும்!

ண்ணாமலை ஏன் திமுக மீது ஊழல் வழக்கினை போடவில்லை என்று கேட்கிறார்கள் பலர், அதில் உபிஸ்களும் உண்டு.. இந்திய அரசியலில் உச்ச அரசியல்வாதிகள் அதிகம் பேர் தண்டிக்கப்பட்டது இந்த வழக்கே. அதில் ஜெயலலிதா, சுக்ராம், சௌதாலா, மாயாவதி(?) என்று தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நீளும். ஒரு ஊழல் வழக்கை எடுத்துக்கொண்டால், அதில் குற்றம் நிகழ்ந்ததை உறுதிபடுத்தி, அது எந்த வழியாக நடந்தது என்பதையும் இவர்கள்தான், இப்படித்தான் ஆதாயம் அடைந்தார்கள் என்று அரசுதான் நிரூபிக்க வேண்டும்.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சொத்துக்களை மட்டும் அடையாளம் கண்டு பிடித்து இதுவெல்லம் அவருடையது என்று கை கைகாட்டிவிட்டால், பின்னர் அவரது பொறுப்பு. ஆம் அதை நான் நேர்மையாகத்தான் சம்பாதித்தேன், வரி கட்டியுள்ளேன் என்று நிரூபிப்பது அவர்கள்தான். அதுவும் நம்மைப்போன்றவர்கள் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டு, வரி, மற்றும் தண்டம் கட்டினால் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் அரசாங்க ஊழியர்கள் அதை செய்ய. முடியாது. எனவேதான் சொத்துகுவிப்பு வழக்கை பிரதானமாக அரசியல்வாதிகளுக்கு எதிராக கையாள்கிறார்கள்.

ஜெயலலிதா மீது 12 வழக்குகள் போடப்பட்டது. அதில் 11 வழக்குகள் திமுக போட்ட வழக்குகள், நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த சொத்து குவிப்பு வழக்கு சுவாமி போட்டது. அதில்தான் தண்டிக்கப்பட்டு, இந்த வழக்கால் மன அளவில் பாதிக்கப்பட்டதால் அவர் பின்பு இறந்தார். ஸ்டாலின் மீது மெட்ரோ ரயில் விவகாரத்தில் கேஸ் போட்டிருந்தா, அந்த கேஸ் லிஸ்ட் ஆகி, வாய்தா முடிஞ்சு வர வரைக்கும் திமுக ஆட்சி முடிஞ்சிடும், இல்ல வழக்கப்போல திமுக ஆட்சி பாதில புட்டுக்கிடும். அபடியே வழக்கு வந்தாலும், அப்பீல், என காலம் கடத்துவார்கள். அதனால பிரச்சினை உடனே தீராது.மேலும் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஜகா வாங்குவானுக.

அதற்கெல்லாம் முக்கிய காரணம் அது வெறும் 200 கோடி என்பதாலும், அது சப்ப மேட்டர் என்பானுக. அதுவும் கட்சி நிதி என்று ஜகா வாங்குவானுக. அதைப்போய் தேர்தலில் இவர்கள் ஊழல் செய்தார்கள் என்று சொன்னால், அட 200 கோடியெல்லாம் சாதாரண விஷயமப்பா என்று ஓட்டுக்கு இன்னும் ₹500 சேர்த்து கொடுத்து சரி செஞ்சிடுவானுக. ஆனால் இப்போ சொத்து குவிப்பு வழக்கு என அவனுககிட்ட இருக்கிற லட்சக்கணக்கான கோடிகள் சொத்து பற்றி சொன்னவுடன் மக்களுக்கு வயிறு எரிய ஆர்ம்பித்து விட்டது. அது எல்லாமே அவர்கள் பெயரில் அல்லது குடும்ப பெயரில் உள்ளதால் அதை தன்னுடையது அல்ல என்று மறுக்க முடியவில்லை. அதனால் நான்கு நாட்கள் ஆகியும் மறுப்பு எவனிடம் இருந்தும் வரவில்லைம் திருடனுக்கு தேள் கொட்டியது. உடனே அறிவாலய பிச்சைக்காரனை வைத்து வழக்கு போடுவேன்னு சொன்னானுக, வக்கீல் நோட்டிஸ்னு ஞாயிற்றுகிழமை வக்கீல்களை வைத்து, தவறுமேல தவறுடன் கொடுத்த நோட்டீஸ் சொல்லிச்சு, அவனுக எந்த அளவிற்கு ஆடிப்போயிருக்கிறானுக என்று. ஆம் சி எம் 1100 கோடி ஒப்பந்தம் போட்டதை ஒரு பக்கம் இல்லைங்கிறானுக, மறுபக்கம் ஆமாங்கிறானுக… கோர்ட்டில் உண்டா, இல்லையா? ஜட்ஜ் கேட்டா துண்டு சீட்டெல்லாம் பார்த்து பதில் சொல்ல முடியாதாம்?!

அடுத்து வழக்கம்போல அது தொழில் மூலம் சம்பாதித்தது, அப்போ வாங்கிய சொத்து வட்டிபோட்டு குட்டி போட்டது என்று கம்பி சுத்தினானுக. சரிடா, அது நேர்மையான சொத்துத்தானே, அப்போ ஏன் தேர்தலின்போது இதை சொல்லவில்லை என்று கேட்க பம்மிட்டனுக.. சரி அப்பத்தான் சொல்லல,, இப்ப சொல்லு எப்படி வந்ததுன்னு என்று கேட்டால் திருடிய ஆயிரக்கணக்கான கோடி பணத்திற்கு கண்க்கு காட்டுவது எளிதல்ல.வெளியே வந்தா அவனுக அடிமை மீடியா யாரும் கேட்க மாட்டானுக, கேட்டாலும் நீங்க வாங்கின சர்ட் நல்லாயிருக்கு, நீங்கள் முதல்வர் ஆக வேண்டும் எசன்று சொல்கிறார்களே என்று கேட்பானு பார்ததா, ரிபப்ளிக், மாப்ள சுருட்டின சொத்து என்ன ஆச்சுன்னு அசிங்கப்படுத்தறானுக. நம்ம ஆட்சி நடந்தும் சுதந்திரமா வெளியே நடக்க முடியலைன்னு ஒரே புலம்பல். வேறு வழியில்லாம் பால்டாயில் அண்ணாமலையை ஜோக்கர்னு சொல்லிட்டு ஓடிப்போய்ட்டான்.

சரி, மோடி ஆட்சிக்கு வந்து 10 வருஷம் ஆச்சே, ஏன் இதுவரை CBI தூங்கிக்கிட்டு இருந்துச்சா என்றால், மத்திய அரசின் பங்கு 15%, மீதி ஸ்டேட்டுக்குத்தான் பெரிய லாஸ், அப்போ இங்கிருக்கிற ஊழல் தடுப்பு அமைப்புகள் என்ன சொறிஞ்சிக்கிட்டு இருக்கான்னு திருப்பி கேச்கிறானுக. பேசாம விட்டுட்டா வழக்கம்போல மறந்திடுவானுகன்னு பார்த்தா அடிச்ச கொள்ளை அளவிற்கு அதிகம் என்பதால் மக்களால எளிதாக மறக்கவும் முடியல, ஜீரணிகவும் முடியல. இது பொய் வழக்கு, உண்மையா இருந்தா கேஸ் போட வேண்டும் என்று உபிஸ் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுக்க, அப்படியா மாப்பிள்ள என்று அண்ணாமல அடுத்த வாரமே கேஸ் கொடுக்கிறேன் என்கிறானுக. நம்மகிட்டத்தானே வேப்பேரு போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுப்பானுகன்னு பார்த்தா, CBI கிட்ட, அதுவும் டைரக்டர்கிட்ட நேரடியா போய் புகார் கொடுப்பேன் என்கிறாரானய்யா மலை.

சரி அதை இன்வெஸ்டிகேசன் செய்ய ஒருசில வருடங்கள் ஆகும் என்றால், அட தத்தி, CBI ஏற்கனவே விசாரச்சு, அதைத்தாண்டா அண்ணாமலைக்கு கொடுத்துதான் வெளில விட்டிருக்கானுக என்று கூட இருக்கிறவன் வயிற்றில் புளிய கரைக்கிறானுக. டேய் அப்ரெண்டிசுகளா, மூடிக்கிட்டு இருங்கடான்னு சொல்லவும் முடியலை, வழக்கம்போல கைவெச்சுப்பார் என்று வீர வசனம் பேசவும் முடியல. சரி, வழக்கம்போல கதவை சாத்திட்டு கால்ல விழ்ந்திடலாம்னு அம்மா, மவனை அனுப்பி மோடிகிட்ட பேசவிட்டா, அப்பா சௌக்கியாமா இருக்காரா, நான் கேட்டதாக சொல்லுன்னு சொல்லிட்டு அனுப்பிச்சு வெச்சிடறாங்க. இங்க வந்தா அவரு என்ன பற்றி கேட்டாரா, இல்ல என் கேசை பற்றி கேட்டாரா என்று நம்மகிட்ட கோர்ட்ல கேட்கிற மாற்றியே கேச்கிறாங்க. இது சரிப்பட்டு வராது, கால்ல விழும்திடாம்னா, மோடி கால்ல விழுவதா, இல்ல அமித்ஷா கால்ல விழுவதா என்றால் அவனுக அண்ணாமலை காலையல்ல காட்டுறானுக?!

சரி அதைக்கூட செஞ்சிடலாமுன்னு பார்த்தா, கேமரா வெச்சு, படம் பிடிச்சு, நாளைக்கு ரெட்ஜெயிண்ட்லேயெ ரிலீஸ் செய்யச்சொன்னாலும் சொல்வானுக போல இரூக்குது. அடுத்த பிரதமர் நாமதான்னு உசுப்பேத்திவிட்டானுக, இப்போ அடுத்த ஊழல் என்ன, அடுத்து எங்கே கேஸ் போடப்போறானுக என்று கேட்கும் அளவிற்கு பொலம்ப வெச்சிட்டானுகளே சொக்கா!? சரி, நாம மட்டும் இல்லை பங்காளி எட்டப்ஸும் கூட வருவாப்லன்னு பார்த்தா, அவரு பாஜக கூட்டணி தொடரும்னு லெஃப்ட்ல இண்டிக்கேட்டர போட்டு, ரைட்ல கைகாட்டிடு, நேரா போறாரு.
அதற்கெல்லாம் மேலாக இது லட்சக்கணக்கான கோடிகள் கொள்ளை அடித்ததை ஆதாரப்பூர்வமாக அவர்களுடையது என்று காட்டிவிட்டால், கோர்ட்டில் தண்டிக்கப்படாவிட்டாலும், அடுதத தேர்தல்ல மக்கள் வெச்சு செஞ்சுடுவானுக. அதனால் சொத்து குவிப்பு வழக்கு என்பது மல்டிபர்ப்பஸ் ஆயுதம். ஆனால் முக்கியமான விஷயம் இதை தேஎதல் வரும்வரை ஆறப்போடக்கூடாது.

அதனால்தான் மலை லிஸ்ட் 1 கொடுதுட்டு அதன் பேரில்.கேஸ் போட சில வாரங்கள் ஆகும்வரை மக்களிடையே பேசு பொருளாக இருக்கும். மேலும் அடுத்த லிஸ்ட்ல யாரு என்று யூக விளையாட்டுக்கள் எல்லாம் நடக்கும். அதற்கு யூக விளையாட்ல பெட் வேற கட்டி விளையாடுகிறானுகளாமே? அதற்கிடையில் இதுபற்றிய ஆவணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கொடுத்தால் ஹைலட்டாகிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டால் அடுத்த லிஸ்ட். இப்படி திருட்டு திமுகவை டிபன்ஸ் மோடிலேயே வைத்துவிட்டு, அதுவும் அதிமுகவில், கம்யூனிஸ்டில், காங்கிரஸில் என்று லிஸ்ட் வேற இருப்பதால வேறு யாரும் அதைப்பற்றி பேசக்கூட முடிய, அவனுகளே பால் போட்டுட்டு, அவனுகளே சிக்ஸர் அடிச்சிக்கிறானுக. அட இது தத்தியல்ல, அண்ணாமலை, தூக்கம் மட்டுமா வராது, கொஞ்ச நாள் போனா காலைல கக்காவே வராது.. காத்திருங்கள்..

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!