செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரமில்லை- முதல்வர் ஸ்டாலின்

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு  அதிகாரமில்லை-   முதல்வர் ஸ்டாலின்

மிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை காவிரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இதனிடையே அவரது உடல் நிலையின் காரணமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் அளிக்கப்பட்டது.

அதேசமயம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Ministerwithout portfolio)அமைச்சராகத் தொடர்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார் . இந்நிலையில் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியாக நாங்கள் இதை சந்திப்போம்” என்று முதல்வர் பதில் தெரிவித்தார்.

error: Content is protected !!