June 7, 2023

ஜெர்மன் மிருககாட்சி சாலையில் விலங்குகளை உண்ணும் விலங்குகள்!

ஜெர்மனியின் நியூ மான்ன்ஸ்டர் என்ற நகரில் உள்ள மிருகக்காட்சி சாலை ஊரடங்கு காரணமாக கடும் நிதிப் பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு உள்ள விலங்கு களுக்கு உணவாக மிருகக்காட்சி சாலையில் உள்ள சில விலங்குகளை கொல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கிட்டதட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன், சீன அரசன் ஒருவன் “இன்டலி ஜென்ஸ் பார்க்’ என்ற ஒன்றை ஆரம்பித்தது. அதில், காட்டு விலங்குகளை வைத்து, அவற்றின் அன்றாட பழக்கவழக்கங்களை பற்றி அறிந்து கொண்டனர். இதுவே, உலகின் முதல் மிருகக்காட்சி சாலை. பின்பு மக்களின் பார்வைக்காகவும், அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவும் பெரிய நகரங்களில் இதுபோன்ற மிருகக்காட்சி சாலைகளை அமைத்தனர். மேலும், மக்களையும், குழந்தைகளையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்காக அங்கு விலங்குகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.இதன் காரணமாக மக்களுக்கு, விலங்குகளின் மேல் அன்பு உண்டாகி, அன்றைய காலத்தில் காட்டு நாய்களை வேட்டைக்காக வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். இன்றைய காலத்தில் இன்னும் பலவகையான விலங்குகளை யும், ஊர்வனங்களையும், பறவைகளை யும், பூச்சிகளையும் பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரித்து வரு கின்றனர். இந்தியாவில் சிறிய அளவில் உயர்ரக மிருகக்காட்சி சாலையை ஆரம் பித்து, விலங்குகளின் பலவிதமான திறமைகளை மக்களுக்கு வெளிகாட்டி வருகின்றனர். உலக நாடுகளில் லண்டன், சான்டியாகோ, அமெரிக்காவின் கலிபோர்னியா, ஜெர்மனியின் பெர்லின் போன்றவற்றில் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை உள்ளது.

அந்த வகையில் ஜெர்மனியி உள்ள மிருகக்காட்சி சாலையின் தலைவர் வெரெனா காஸ்பரி செய்தியாளர்களிடம் இந்த கொரோனா தாக்கம் குறித்து, “கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மிருக காட்சி சாலைக்கு வரவேண்டிய வருமானம் தடைப்பட்டுள்ளது. விரைவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நிலைமை சீரடையாவிட்டால் மிருக காட்சி சாலைக்கு கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும். இதே நிலை நீடித்தால் மிருகங்களுக்கு உணவு வழங்கக் கூட கைகளில் காசு இருக்காது. நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் இறுதிக்கட்டமாக விலங்குகளுக்கு உணவிட மிருகக்காட்சி சாலையில் உள்ள சில விலங்குகளை கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என கவலையுடன் கூறினார்.

மிருகக்காட்சி சாலையின் தலைவர் கூறியதை மற்ற அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எந்த விலங்குகள் உணவுக்காக கொல்லப்படும் என்ற விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. சுமார் 700 மிருகங்கள் உள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுவது அங்குள்ள வைடஸ் என்ற பனிக்கரடி தான். ஜெர்மனியிலேயே மிக பெரிய பனிக்கரடி யான வைடஸ் அங்கு உணவுக்காக தேர்ந்தெடுக்கப்படும் கடைசி விலங்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.