உங்களை 48 மணி நேரத்தில் எழுத்தாளர் ஆக்க கேரண்டி தரும் ஜெமினி!

உங்களை 48 மணி நேரத்தில் எழுத்தாளர் ஆக்க கேரண்டி தரும் ஜெமினி!

ரு காலத்தில் ‘எழுத்தாளர்’ என்ற அந்தஸ்தைப் பெற பல ஆண்டுகள்  மெனக்கெட்டு காத்திருக்க வேண்டியிருந்தது. கற்பனைத் தட்டுப்பாடு, நேரமின்மை, அட்டைப்பட வடிவமைப்பு என ஒரு புத்தகம் வெளியாவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், இன்று நிலைமை தலைகீழ்! கூகுளின் ‘ஜெமினி’ (Gemini) ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, ஒரு முழு புத்தகத்தையே இரண்டே நாட்களில் (48 மணி நேரம்) எழுதி, வடிவமைத்து, விற்பனைக்குத் தயார் செய்ய முடியும் என்பது நிஜமாகியுள்ளது. இது வெறும் நகல் எடுப்பதல்ல; உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து அதை ஒரு காவியமாக மாற்றும் கலை.

இந்த வாரமே நீங்கள் ஒரு புத்தகத்தை வெளியிட்டுப் புகழடைய உதவும் 5 மாயாஜால ‘ப்ராம்ப்ட்கள்’ (Prompts) இதோ உங்கள் பார்வைக்கு:

1. மார்க்கெட் ஹிட் அடிக்கும் ‘தலைப்பை’ தேர்ந்தெடுங்கள் (The Profit Hunter) வெறுமனே எழுதுவதை விட, மக்கள் எதைப் படிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து எழுதுவதுதான் புத்திசாலித்தனம்.

  • ப்ராம்ப்ட்: “ஜெமினி, தற்போது அமேசான் கிண்டில் மற்றும் உலகளாவிய புத்தகச் சந்தையில் எந்த மாதிரியான ஜானர்கள் (Genres) – உதாரணமாக சைபர் கிரைம், மனநல ஆலோசனை அல்லது வரலாற்றுப் புனைவுகள் – ட்ரெண்டிங்கில் உள்ளன? ஒரு புதிய எழுத்தாளர் எளிதில் வெற்றி பெறக்கூடிய 3 தனித்துவமான கருப்பொருள்களை (Niches) எனக்குப் பரிந்துரை செய்.”

2. அத்தியாயங்களை அடுக்கடுக்காகப் பிரித்தல் (The Master Blueprint) புத்தகத்தின் முதுகெலும்பே அதன் கட்டமைப்புதான். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

  • ப்ராம்ப்ட்: “நான் தேர்ந்தெடுத்துள்ள [தலைப்பு] பற்றி ஒரு முழுமையான ‘பொருளடக்கம்’ (Table of Contents) தயார் செய். 12 அத்தியாயங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ‘கிளிஃப்ஹேங்கர்’ (Cliffhanger) எனப்படும் அடுத்த பக்கத்தைப் புரட்ட வைக்கும் விறுவிறுப்புடன் முடிய வேண்டும். இதில் வாசகர்களுக்குத் தேவையான தீர்வுகளையும் தெளிவான விளக்கங்களையும் உட்புகுத்து.”

3. உயிரோட்டமான எழுத்து நடை (The Soulful Writer) ஏஐ எழுதும் செய்தி கட்டுரை போல இல்லாமல், ஒரு மனிதன் தன் அனுபவத்தைப் பகிர்வது போன்ற நெருக்கமான உணர்வைத் தர வேண்டும்.

  • ப்ராம்ப்ட்: “அத்தியாயம் 4-ஐ விரிவாக எழுது. இதில் வரும் தகவல்கள் மிகவும் எளிமையாகவும், சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் நடையிலும் இருக்கட்டும். கடினமான சொற்களைத் தவிர்த்துவிட்டு, சுவாரசியமான உதாரணங்களுடன் 3,000 வார்த்தைகளில் இந்த அத்தியாயத்தைப் பூர்த்

4. பார்த்ததும் ஈர்க்கும் ‘அட்டைப்படம்’ (The Aesthetic Cover Design) புத்தகத்தின் தரத்தை அதன் அட்டைப்படத்தைப் பார்த்தே வாசகர்கள் தீர்மானிப்பார்கள். அதற்கு ஒரு கச்சிதமான ‘டிசைன் ப்ராம்ப்ட்’ அவசியம்.

  • ப்ராம்ப்ட்: “எனது புத்தகத்தின் கருப்பொருள் [தலைப்பு]. இதற்காக மினிமலிஸ்டிக் ஸ்டைலில் ஒரு கவர்ச்சிகரமான அட்டைப்படத்தை உருவாக்க எனக்கு ஒரு டிசைன் ப்ராம்ப்ட் கொடு. அதில் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள், எழுத்துருக்கள் (Fonts) மற்றும் குறியீடுகள் எவை என்பதைத் தெளிவாகக் கூறு. இது நவீனமாகவும், அதே சமயம் ஒரு கிளாசிக் புத்தகத்தின் தோற்றத்தையும் தர வேண்டும்.”

5. உலகறியச் செய்யும் விளம்பரம் (The Viral Marketer) புத்தகம் எழுதி முடித்தாகிவிட்டது, அடுத்து அதை விற்பனை செய்ய வேண்டாமா? அதற்கு ஒரு மார்க்கெட்டிங் பிளான் தேவை.

  • ப்ராம்ப்ட்: “எனது புத்தகம் இன்று வெளியாகிறது. இதற்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் பகிரக்கூடிய 7 நாட்களுக்கான ஒரு விளம்பரத் திட்டத்தைத் தயார் செய். ஒவ்வொரு நாளும் வாசகர்களைக் கவரும் வகையில் சுருக்கமான, விறுவிறுப்பான கேப்ஷன்களையும், ட்ரெண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக்குகளையும் சேர்த்துக் கொடு.”

ஆந்தையார் கார்னர்:

தொழில்நுட்பம் கையில் இருக்கிறது என்பதற்காக உணர்ச்சியற்ற காகிதங்களை உருவாக்கக் கூடாது. ஏஐ தரும் தகவல்களை ஒரு ஜல்லடையில் போட்டுச் சலித்து, அதில் உங்கள் 45 ஆண்டுகால அனுபவத்தையும், தனித்துவமான பார்வையையும் சேர்த்தால், அது காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷமாக மாறும். 48 மணி நேரத்தில் ஒரு புத்தகம் என்பது சாத்தியம்தான், ஆனால் அதில் ஒரு சொட்டு ‘உண்மை’யைச் சேர்ப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது!

சந்திராகுமார்

Related Posts

error: Content is protected !!