தனஞ்செயன் தந்திரத்தால் கெளதம் கார்த்திக் கரையேறுவாரா?

தனஞ்செயன் தந்திரத்தால் கெளதம் கார்த்திக் கரையேறுவாரா?

நவரச நாயகன் என்று பேரெடுத்த கார்த்திக் வாரிசு என்பதால் கோடம்பாக்கத்தில் தட்கல் முறை யில் கதாநாயகன் வாய்ப்பை பெற்றவர் கெளதம் கார்த்திக். அதுவும் தமிழ் சினிமா முகங்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் இவர் அறிமுகமான “கடல்’ படம் ஓடையாக கூட மாறாமல் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் அடுத்த டுத்த படங்களில் நடிக்க இவருக்கான சம்பளம் கோடிகளில் கேட்கப்பட்டது. அதே சமயம் தெலுங்கில்  “அலா முதலைந்தி ” படத்தில் நாயகனாக நடித்த படமும் பிளாப். இப்படம் ” என்னமோ ஏதோ ” என தமிழில் மொழி மாற்றம் செய்து ரீலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் நாளே முடங்கிப் போனது தியேட்டர்களில்.

அடுத்து ” வை ராஜா வை, படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கம், AGS என பிரம்மாண்டம், கெளரவ வேடத்தில் தனுஷ் என எல்லாம் இருந்தும் படம் வசூலில் ஒன்றுமில்லாமல் ஓரங்கட்டப்  பட்டது. அடுத்து கார்த்திக் கதாநாயக வேஷம் கட்டிய “முத்துராமலிங்கம் “பல இடங்களில் ரீலீஸ் கூச ஆகவில்லை, பெரும்பாடுப்பட்டு வெளியான இடங்களில் முதல் காட்சியிலேயே மூடுவிழா கண்டது. இதன் பின் ஏகப்பட்ட பில்டப்புக்களுக்கு பின் பாரம்பரியமிக்க வெற்றி பட நிறுவனம் சத்யஜோதி தயாரிப்பில் கெளதம் கார்த்திக்நாயகனாக நடித்த “ரங்கூன் ” ரீலீஸ் ஆனது. சுமார் 4.5 கோடிக்கு தமிழ்நாடு உரிமை விற்கப்பட்ட இப்படம் வெறும் 2 கோடி தான் வசூலித்தது. கோடிகளில் சம்பளம் கேட்கும் கெளதம் கார்த்திக் நடித்த படங்கள் தயாரிப்பாளர்களை தெருக்கோடியில் தான் நிறுத்தி உள்ளது.

இந்த சூழலில் (‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -ஆகிய) தோல்விப் படங்களின் இயக்குனர் R. கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் நடித்துள்ள ” இவன்தந்திரன்” படம் வரும் 30.06.17 அன்று ரீலீஸ் ஆகிறது.இப்படத்தை உலக மெங்கும் வெளியிடும் பொறுப்பு தனஞ்செயன் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. நம் நாட்டில் நிலவும் கல்வித்துறை அரசியலை பேசும் இத்திரைப்படத்தை தற்போது கோலிவுட்டில் கல்வித் தந்தையாக வலம் இவர் தன் நட்பு மற்றும் பழக்க வழக்கத்தை வைத்து ஏதேதோ வாய்ஜாலம் செய்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தியேட்டர்கள் கமிட் செய்துள்ளார். ஆனால் தலைப்புக்கேற்றார் போல் நடந்துக் கொள்ளும் தனஞ்செயனால் இந்த “இவன் தந்திரன்” என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் தயாரிப்பாளர்கள் தவிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றார் போல் பல்வேறு புறநகர் பகுதிகளில் இந்த படத்திற்கு தியேட்டர் கொடுப்பதில் நெருக்கடி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது..

Related Posts