இண்டேன் & பாரத் கேஸ் : வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வதெப்படி?
தமிழகம் முழுவதும் உள்ள 12 பாட்டிலிங் பிளான்ட்கள் மூலம் சுமார் 2.65 கோடி இண்டேன் சிலிண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், இண்டேன் & பாரத் கேஸ் இரண்டிலும் வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இண்டேன் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யலாம். அது போல் பாரத் கேஸ் புக் செய்வதற்காக புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். 1800224344 என்ற எண்ணிற்கு ஹலோ என டைப் செய்தால் வாடிக்கையாளரின் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விரைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படும்.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும். மேலும், சிலிண்டர் விநியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிப்பு, சரியான எடை, சீல் மற்றும் கசிவுகள் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை கிடைக்கப்பட்டதா என வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யலாம்.” என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த பாரத் பெட்ரோலியம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைமை அதிகாரி சிவசங்கரன் , “தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் பாரத் கேஸ் வாடிக்கை யாளர்கள் எளிதில் சிலிண்டர்களை பதிவு செய்து பெறுவதற்காக ஏற்கனவே மிஸ்டு கால் முறை ஆப் மூலமாக பதிவு செய்யும் முறை இருக்கிறது
தற்போது இதனை மேலும் எளிமையாக்கும் விதமாக வாட்ஸ் அப் செயலி மூலம்
1800224344 என்ற எண்ணிற்கு ஹலோ என டைப் செய்தால் வாடிக்கையாளரின் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விரைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படும். பண பரிவர்தனை செய்வதற்கும் வாட்ஸ் அப் செயலி மூலமாகவே லிங்க் அனுப்பப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் எளிமையாக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தின் மூலம் கரோணா பரவலும் தடுக்கப்படுகிறது”என்றார்.