கொரோனா & ஊரடங்கு காலத்தில்அதிக விற்பனை -பார்லே ஜி பிஸ்கட் சாதனை!

கொரோனா & ஊரடங்கு காலத்தில்அதிக விற்பனை -பார்லே ஜி பிஸ்கட் சாதனை!

இது நம் அந்தை ரிப்போர்ட்டர் இணைய இதழில் முன்னொரு முறை இடம் பிடித்த க்விஸ்;

ஐந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, உலக பிஸ்கெட்களில் முதல் இடம் பிடிக்கும் பிராண்ட் எது?

இந்தியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான கடைகளில் கிடைக்கும் பிஸ்கெட் எது?

மக்களின் ருசியும், ரசனையும் நாளுக்கு நாள் மாறும் நிலையில், 76 ஆண்டுகளாக மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் பிஸ்கெட் எது?

மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் பார்லே ஜி பிஸ்கெட்!

ஆம்.. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பிஸ்கட் பார்லே ஜி- யின் விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு இந்த கொரோனா & ஊரடங்கு காலத்தில், அதிகமாக விற்பனையாகியுள்ளதாக பார்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் கிராமப்புற பெட்டிக்கடை முதல், மெட்ரோ நகரங்களின் மால்கள் வரை, எல்லா இடங்களிலும், எல்லாதரப்பு மக்களிடம் அறிமுகமான “பார்லே ஜி” கடந்த 65 ஆண்டுகளாக இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
பெட்டிக்கடைகளுக்கு ஏற்ப சின்னஞ்சிறு பிஸ்கெட்கள் கொண்ட 3 ரூபாய் பாக்கெட்டாகவும் கிடைக்கும். 100 ரூபாய் கொடுத்து, 1 கிலோ எடை கொண்ட பெரிய பாக்கெட்டாகவும் வாங்கலாம்.

இந்தியாவை சேர்ந்த பார்லே அக்ரோ புட்ஸ் நிறுவனம் 65 ஆண்டுகளாக பிஸ்கட் தயாரிப்பில் உள்ளது. இந்தியாவின் மொத்த பிஸ்கட் விற்பனையில் 60% பார்லே வசம் தான் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கடந்த ஆண்டு (2018) பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் இந்திய அளவில் 5300 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது . இது, பிஸ்கட் உலகில் புது சாதனை. காரணம், இந்த பிஸ்கட் சிறு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடை, கட்டில்கடைகள் முதற் கொண்டு பெரிய பெரிய நகரங்களில் உள்ள மால்கள் வரை நமக்கு கிடைக்கும்.

கடந்த 70 ஆண்டுகளில் சந்தையில் பல நிறுவனங்கள் பல பிஸ்கட்டுகளை அறிமுகம் செய்து இருந்தாலும்.அவற்றுக் கெல்லாம் இன்றைக்கும் ராஜா-வாக நிற்கிறது பார்லே-ஜி. அறிமுக மான காலம் முதல் இன்று வரை இதன் சுவை மாறியதே இல்லை. மேலும், இதனுடைய மேல் கவரும் மாறியதில்லை. 90 களில் சக்திமான என்ற தொலைகாட்சி தொடரை வழங்கியதே இந்த பார்லே ஜி தான்.

தற்போது கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், பெருமளவில் பிஸ்கட் களை வாங்கி உட்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பிஸ்கட் என அழைக்கப்படும் பார்லே ஜி பிஸ்கட்களின் விற்பனை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பார்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு முகமைகளும் மக்களுக்கு வழங்கிய உணவுப் பொருட்களில் பார்லே ஜி பிஸ்கட்களே அதிகளவில் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 2 நாட்களுக்குள், உற்பத்தியை தொடங்கு வதற்கான அனுமதியை பார்லே நிறுவனம் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!