சென்னை பத்திரிகையாளர் மன்றப் பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழு விபரம்!

சென்னை பத்திரிகையாளர் மன்றப் பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழு விபரம்!

1972இல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Madras Press Club). 1996ஆம் ஆண்டு ‘மெட்ராஸ்’ எனும் பெயர் சென்னையாக கலைஞர் அவர்களால் மாற்றப்பட்டதை ஒட்டி,1997இல் ‘சென்னை பத்திரிகையாளர் மன்றம்’ (Chennai Press Club) என்று தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் 403/1997 என்ற பதிவெண்ணைப் பெற்று பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

முன்னதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் குறித்து பரவும் வதந்திகளுக்கு முன்னர் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் எடிட்டோரியர் பகுதியில் வந்த சேதியைப் படிக்க இந்த வரிகளை க்ளிக் செய்யவும்

இனி இன்றைய சேதி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இன்று 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை காலை நமது மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் : 1

மறைந்த மூத்த பத்திரிகையாளர்கள் திருவாளர்கள் மோகன், அன்பழகன், கோசல்ராம், துரைராஜ், பிரியா கல்யாணராமன்,பாக்யராஜ் ,சுந்தரமூர்த்தி,குமரி முரசு ராஜேந்திரன், ராஜ் டிவி வேல்முருகன், தினபூமி மனோகரன் , யு.என்.ஐ குமார்,சுதாங்கன்,தினமணி ஜெகதீசன், வெங்கட்ராமன் ,கிருஷ்ணன் பாலா, தினமலர் பார்த்தீப மகாராஜன் மற்றும் சமீபத்தில் காலமான ஈடிவி லெனின் உள்ளிட்ட 40 பத்திரிகையாளர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒரு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தீர்மானம் : 2

பத்திரிகையாளர்களுக்கான அரசு அங்கீகார அட்டை பரீசிலனைக் குழுவில் பத்திரிகையாளர் அமைப்பின் பிரதிநிதிகள் இடம் பெறுவது குறித்து வலியுறுத்தப்படுகிறது. அது போலவே பத்திரிகையாளர் ஓய்வு ஊதிய பரிசீலனைக் குழுவிலும் பத்திரிகையாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் இடம்பெற செய்ய வலியுறுத்தப் படுகிறது.

தீர்மானம்: 3

2015 முதல் 2023 வரை உள்ள எட்டு ஆண்டுகளுக்கான தணிக்கைச் செய்யப்பட்ட கணக்குகள் பொதுக்குழுவில் வைக்கப்பட்டது.அது ஒரு மனதாக ஏற்கப்பட்டது.

தீர்மானம்:4

மன்றப் பதிவை மீள் பதிவேற்றம்செய்யவும் ,போலியாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு ரத்து செய்யப்படுவதற்கும் பேருதவி செய்த தமிழக முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்,முதல்வரின் செயலாளர்கள்,பத்திரப் பதிவுத்துறை அமைச்சர், செயலாளர், பதிவுத்துறை தலைவர்,காவல் துறை ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்ட
து.

தீர்மானம்: 5

மன்றத்தை தொடங்கி வைத்த கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மன்றத்தின் சார்பில் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 6

தேர்தல் நடத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை,அமைப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்ய உரிய பரிந்துரைகளை வழங்கவும்,தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கு தடையாக உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறப்பு வழிகாட்டுக் குழு ஒன்றை இந்த மன்றப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

சிறப்பு வழிகாட்டு குழு உறுப்பினர்கள்

மூத்த பத்திரிகையாளர்கள் , திருவாளர்கள்

1.என்.ராம்

2.நக்கீரன் கோபால்

3.பகவான் சிங்

4.சாவித்திரி கண்ணன்

5.நூருல்லா

6.குபேந்திரன்

7.லட்சுமி சுப்பிரமணியன்

8.சிகாமணி

9.கவிதா முரளிதரன்

10.முருகேசன்

11.சண்முகப் பிரியன்

12.டி.சுரேஷ் குமார்

ஆகியோரை சிறப்பு வழிகாட்டு குழு உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுகிறது. இந்த குழு மூன்று மாதக்காலத்தில் குறிக்கோளை முடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தீர்மானம்:7

தேர்தல் வழக்குகள் திரும்பப் பெறும் நாளில் இருந்து 45 நாட்களுக்குள் , தேர்தல் ,உறுப்பினர் சேர்க்கைக்கான மற்றும் அமைப்பு விதிகளில் தேவையான திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

இந்த ஏழு தீர்மானங்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றப் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

பத்திரிகையாளர் ஒற்றுமை ஓங்குக

அன்புடன்

✍️பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
20.08.2023

error: Content is protected !!