ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ நடுரோட்டில் சுட்டுக் கொலை! -வீடியோ

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ நடுரோட்டில் சுட்டுக் கொலை! -வீடியோ

ப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நாட்டின் நாரா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பான் நாட்டில் துப்பாக்கி பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. உலகிலேயே மிக கடுமையான துபாக்கி கட்டுப்பாடு சட்டங்களை கொண்ட ஜப்பான் நாட்டில் இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது அரிது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க குவாட்(ஜப்பான்,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா) கூட்டமைப்பு உருவாக்குவதில் முக்கிய காரணமாக இருந்தவர் ஷின்சோ அபே. ஷின்சோ அபேவின் மரணத்தையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டின் மேலவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஷின்சோ அபே சுடப்பட்டார். அவர் உடனடியாக ஹெலிகாப்படர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மரடைப்பு ஏற்பட்டு நினைவற்ற நிலையில் உள்ளதாக முதற்கட்ட மருத்துவமனை தகவல்கள் கூறியிருந்தன. ஷின்சோ அபேவை தூப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவை தலைமை செயலாளர் ஹிரோகசு மத்சுனோ தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டெட்சுயா யமகாமி எனவும் அவருக்கு வயது 41 எனவும் ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்ட நபர் அந்நாட்டின் கடற்படையில் பணியாற்றியுள்ளார்.

67 வயதான ஷின்சோ அபே ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். முதன்முதலாக 2006ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஓராண்டிலேயே பதவி விலகினார்.பின்னர், 2012ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்வான அவர் 2020ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில்,2020ஆம் கோவிட் பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார் ஷின்சோ அபே.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராகப் பதவிவகித்தவர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. இந்தியாவுடனான நல்லுறவை வளர்த்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. குவாட் அமைப்பின் மூலம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை அவர் பேணிவந்தார். புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவில் தொடங்க அவர் முயற்சி எடுத்தார்.

Related Posts

error: Content is protected !!