ட்விட்டரில் ஃப்ளீட் செய்யும் வசதி வந்தாச்சு!

ட்விட்டரில் ஃப்ளீட் செய்யும் வசதி வந்தாச்சு!

நம்மில் பலரும் பயன்படுத்தும் ட்விட்டரில் (Twitter), இனி ஜஸ்ட் லைக் “ட்வீட்” செய்வது மட்டுமல்லாமல், அந்த செய்தி ஒரே நாளில் மறைந்து விடும் ஃப்ளீட் கூட(Fleet) செய்ய முடியும் என்றும் ட்விட்டர் இந்த புதிய அம்சத்தை தற்போது சோதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி என்ற பெயரில் வழங்கப்படும் சேவைதான் ட்விட்டரில் ‘ஃப்ளீட்’ என அழைக்கப்படுகிறது. இதில் பயனர்கள் ட்வீட் செய்யும் தகவல்கள் 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும். இதனை லைக்கோ, ரீட்வீட்டோ செய்ய முடியாது என்றும், தனிப்பட்ட முறையில் கமெண்ட் மட்டும்தான் செய்ய முடியும் என்றும் ட்விட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பிரேசில் நாட்டில் இந்த வசதி முதல்முறையாக அமலுக்கு வந்தது. அதற்கு கொஞ்சம் ஆதரவுக் கிடைத்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அப்டேட்டை கொடுத்து உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற ட்வீட்கள் போல் இல்லாமல், ஸ்டோரியில் போடும் ட்வீட்களை ஷேர் செய்வது கடினம். பயனர்கள் மற்றவர்கள் ட்விட்டர் கணக்கை பின் தொடரவில்லை என்றாலும், அவர்களது ஃப்ளீட்களை பார்க்க முடியும். அதே போல் வாட்ஸ் அப்பில் வருவது போல் நாம் போடும் ஸ்டோரியை யார் யார் பார்க்கிறார்கள் என்பதையும் ட்விட்டர் அப்டேட்டில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக ட்விட்டர் செயலி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் கொடுக்கப் பட்டுள்ளது. இணைய தளங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களால் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என விளக்கமளித்துள்ளனர். போட்டோக்கள், செய்திகள், GIF உள்ளிட்டவைகளை ட்விட்டர் ஃப்ளீட்டில் பகிர முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ட்விட்டர் கணக்கு வைத்துள்ள பயனர்கள் செயலியை அப்டேட் செய்யுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts