பொதுவெளியில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் – ஐஏஎஸ் அதிகாரிகள்: அதிரடி நடவடிக்கை எடுத்த கர்நாடகாஅரசு!

பொதுவெளியில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் – ஐஏஎஸ் அதிகாரிகள்: அதிரடி நடவடிக்கை எடுத்த கர்நாடகாஅரசு!

ர்நாடக மாநிலத்தில் குழாயடிச் சண்டையாக வலுத்த இரு பெண் உயரதிகாரிகளும், மாநில அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.

ரூபா ஐபிஎஸ் – ரோகிணி ஐஏஎஸ் என்ற இரு உயர் பொறுப்புகளின் இருக்கும் பெண்களை, இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. புதிய பொறுப்புகள் ஏதும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ரோகிணியின் அரசியல் தொடர்புகளை முன்வைத்து, ரூபா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டதில் விவகாரம் தொடங்கியது. அரசியல்வாதிகள் சிலரின் ஊழலுக்கு துணைபோனதாகவும், கொரோனா காலத்தில் மக்கள் துயருக்கு ஆளானதன் மத்தியிலும் தனிப்பட்ட வகையில் ஆதாயம் அடைந்ததாகவும், ரூபா தனது குற்றச்சாட்டுகளில் ரோகிணியை சங்கடத்துக்கு ஆளாக்கி இருந்தார்.

உச்சமாக ரோகிணியின் தனிப்பட்ட படங்களை பொதுவில் பகிர்ந்து, இவற்றை ரோகிணி தனது ஆண் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் ரூபா தனிப்பட்ட வகையில் தாக்கினார். உக்கிரமான ரோகிணி, ரூபாவை மனநிலை பேதலித்தவர் என்று தாக்கினார். சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் கர்நாடக மாநிலத்தின் கவனம் சிதறுவதாக ஆளும் பாஜக அரசு பதறியது.

முதல் கட்டமாக இருதரப்பினருக்கும் பொதுவானவர்கள் மூலமாக சமரசத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன்படி பொதுவெளியில் பகிர்ந்த ரோகிணியின் படங்களை ரூபா நீக்கினார். ஆனால் அவற்றின் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் சமூக ஊடகங்களில் சுற்றுவது நின்றபாடில்லை. ஊடகங்களும் ரூபா முன்வைத்த குற்றச்சாட்டுகளின் பின்னணியிலான அரசியல் விவகாரங்களை ஆராய ஆரம்பித்தன.

எனவே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, ரூபா – ரோகிணி என இருவரையும் அவரவர் பதவிகளில் இருந்து இடமாற்றம் செய்வதாக அரசு அறிவித்தது. ஆனபோதும், இருவருக்கும் புதிய பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. இந்த இருவர் மட்டுமன்றி ரூபாவின், ஐஏஎஸ் கணவரான மனீஷ் என்பவரும் டம்மி இடத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!