பாஜகவிற்கு சலுகைகளை அளித்து ஒருதலை பட்சமாக செயல்பட்ட ஃபேஸ்புக்!

பாஜகவிற்கு சலுகைகளை அளித்து ஒருதலை பட்சமாக செயல்பட்ட ஃபேஸ்புக்!

லக அளவில் டாப் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதில் பாஜகவிற்கு சலுகைகளை அளித்து ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக, நாடாளுமன்ற நிலை குழு எழுப்பிய கேள்விகளுக்கு அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, தகவல் தொழில் நுட்ப துறைக்கான நாடளுமன்ற நிலை குழு ஃபேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் கேட்டது.

விளம்பரங்களை வெளியிடுவதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் கொள்ளை வகுக்கப்பட்டு செயல்படுத்த படுவதாக, ஃபேஸ்புக் நிறுவன பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இதில் நிறுவனம் தலையிடுவதில்லை ஏற்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளம்பரம் வெளியிடுவதில் அரசியல், அரசியல் அல்லாத விபரங்கள் என்று வித்தியாசம் எதுவும் பார்ப்பதில்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜசீரா, தி ரிப்போட்டர்ஸ் கலெக்டிவ் நாளிதழில்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி எழுத்து பூர்வ விளக்கமளிக்கும் படி ஃபேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டனர்.

மேலும் தனிநபர் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தியது குறித்தது, சோபிஜாங் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ள குற்ற சாட்டுகளுக்கும், தனிநபர் உரிமைகளை தவறாகப் பயன்படுத்திய எழுத்து பூர்வ விளக்கமளிக்க நிலை குழு வலிறுத்தி வருகிறது. விசாரணையை முடித்து விரைவில் நிலை குழு அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.

பாஜகவிற்கு ஆதராக செயல்பட்டு ஃபேஸ்புக் நிறுவனம் பயனடைவதாக அண்மையில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!